அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் பெட்ரோல் விலை மட்டும் சுமார் 12 ரூபாய் சிறிது சிறிதாக விலை ஏற்றினால் தெரியாது என்று உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களை காரணம் காட்டி மத்திய அரசு தப்பிக்கமுடியாது. காரணம் ஒவ்வொரு முறையும் எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்த்தும்போதும் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் என்பது நிபந்தனை.
எனவே விலை உயர்வு என்பது எண்ணெய் நிறுவனங்களின் முடிவு மட்டுமே என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது. மறைமுகமாக மத்திய அரசும் பெட்ரோல் விலை உயர்வுக்கு உடந்தை என்பது தெளிவாகிறது. எனவே மத்திய அரசு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும்.
மேலும் ஏற்கனவே பல அறிக்கைகளில் குறிப்பிட்டபடி, எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் கூட்டமைப்பு நாடுகளுடன் பேசி வளரும் நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்தை கணக்கில்கொண்டு அத்தகைய நாடுகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு கச்சா எண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது என்ற கோரிக்கையை வைக்கவேண்டும் என பிரதமரை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

No comments:
Post a Comment