Thursday, December 30, 2010

சரத்குமார் தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி

மேட்டுப்பாளையம், டிச. 26-

அத்திக்கடவு- அவினாசி கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மேட்டுப்பாளையத்தில் இன்று மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி இன்று காலை மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது. கட்சியின் தலைவர் சரத்குமார் பேரணிக்கு தலைமை தாங்கி னார். பின்னர் மோட்டார் சைக்கிளை ஓட்டியபடியே பேரணியில் பங்கேற்றார். அவரை தொடர்ந்து கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அணி வகுத்து சென்றனர்.

பேரணி காரமடை, கரியாம் பாளையம், அன்னூர், கருவலூர், ஆட்டையம் பாளையம், அவினாசி, சேவூர், சாவக்காட்டுப்பாளையம், நம்பியூர், கெட்டிச்செவியூர், குன்னத்தூர், சீனிபுரம் வழியாக மாலை பெருந் துறையை சென்றடைகிறது. அங்கு விளக்க கூட்டம் நடைபெறுகிறது.

மோட்டார் சைக்கிளில் சென்ற சரத்குமார் ஆங்காங்கே திட்டத்தின் தேவை குறித்து மக்களிடம் விளக்கினார். வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிள் பேரணியில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், கோவை வடக்கு செயலாளர் நேருஜி, நகர மாவட்டச் செயலாளர் கணேசன், ஈரோடு வடக்கு செயலாளர் லாலா கணேசன், தெற்குச் செயலாளர் சிங்கம் வேலுச்சாமி, மேட்டுப்பாளையம் நகர செயலாளர் ஜெயக்கொடி, அன்னூர் நகரச் செயலளார் பொன்னுச்சாமி, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், திருப்பூர் மனோகரன், தளி சிவக்குமார், அவினாசி சித்ரவேல், முருகேசன், ஊத்துக்குளி வெங்கிடசாமி, சேலம் முருகேசன், வெஸ்லி.

கட்சியின் மாநில நிர்வாகி கள் துணைத் தலைவர் ஏ.நாராயணன், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயப்பிரகாஷ், துணைப் பொதுச் செயலாளர் இளஞ்சேரன், இளைஞரணி செயலாளர் கராத்தே சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment