Wednesday, March 30, 2011

Tuesday, March 29, 2011

தென்காசியில் ராதிகா வீதி வீதியா பிரசாரம்

தென்காசி : தென்காசியில் ராதிகா வீதி வீதியா சென்று இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டார். தென்காசி தொகுதியில் ச.ம.க.தலைவர் சரத்குமார் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தென்காசி மேலமாசி வீதி, நடு பெட்ரோல் பங்க், வாலிபன் பொத்தை, தைக்கா தெரு, போலீஸ் குடியிருப்பு, எல்.ஆர்.எஸ்.பாளையம், மங்கம்மா சாலை, களக்கோடி தெரு, ஹவுசிங் போர்டு காலனி, கூளக்கடை பஜார், அரிப்புக்கார தெரு, மரைக்காயர் பள்ளிவாசல் தெரு, புதுமனை தெருக்கள், கொடிமரம், சொர்ணபுரம் மேட்டு தெரு, பாறையடி தெரு, வாய்க்கால் பாலம், கீழப்புலியூர், வேம்படி பள்ளிவாசல் தெரு, செய்யது குருக்கள் பள்ளிவாசல் தெரு, மவுண்ட் ரோடு, மலையான் தெரு, ஆபாத் பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ராதிகா சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார்.

ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடி நிற்கும் இடங்களில் ராதிகா பிரசார வேனில் இருந்து இறங்கி சென்று அவர்களுடன் கலந்துரையாடல் செய்தார். பொதுமக்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைகளை போக்க இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு சரத்குமாரை வெற்றி பெற செய்யும்படி ராதிகா பொதுமக்களை கேட்டுக் கொண்டார். பிரசாரத்தின் போது ராதிகா நிருபர்களிடம் கூறியதாவது: ""பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக கூறினர். அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றம் தான். அ.தி.மு.க.தேர்தல் அறிக்கை அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, 4 கிராம் தங்கம், முதியோருக்கு பஸ் பாஸ், உதவித் தொகை அதிகளவில் மக்களை ஈர்த்துள்ளது. மின் வெட்டு பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதற்கும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். விலைவாசி உயர்வால் மக்கள் திண்டாடுகின்றனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கெல்லாம் விடிவு காலம் ஆட்சி மாற்றம் என்பது மறுக்க முடியாது'' என்றார் ராதிகா.

Monday, March 28, 2011

தென்காசியில் சரத்குமாரை ஆதரித்து நடிகர் மயில்சாமி பிரசாரம்

தென்காசி : சினிமா துறை உள்பட அனைத்து துறைகளிலும் கருணாநிதியின் குடும்பத்தினர் தலையீடு இருக்கிறது. இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டும் என் தென்காசி தொகுதியி்ல் நடிகர் சரத்குமாரை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்த காமெடி நடிகர் மயில்சாமி பிரசாரம் செய்தார்.


தென்காசியில் நடந்த பிரசாரத்தின்போது மயில்சாமி கூறுகையில்,

கருணாநிதி குடும்ப ஆட்சியை வீ்ட்டிற்கு அனுப்ப வேண்டும், சினிமா துறை மட்டுமல்லாமல் அனைத்து துறையிலும் கருணாநிதியின் குடும்ப தலையீடு இருக்கிறது. உழைத்து 500 ரூபாய் பெற்றாலும் அதற்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது.

ஏமாந்தவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம்தான். அப்படி ஏமாற்றுபவர்களை விரட்டியடிக்க வேண்டும். தமிழகத்தில் நல்லாட்சி மலரவும், மக்கள் வளமாக வாழவும், சட்டம், ஓழுங்கு சீராக இருக்கவும் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும். அதற்கு தென்காசி தொகுதியில் சரத்குமாரை ஆதரிக்க வேண்டும்.

அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு போட்டு அவரை அமோகமாக வெற்றி பெறச்செய்யும்படி கேட்டு கொள்கிறேன் என்றார் மயில்சாமி.
English summary
Comedy Actor Mayilsamy has urged Tenkasi voters to vote out Karunanidhi and DMK from the rule. He was campaigning for Actor Sarath Kumar and asked the voters to make Jayalalitha CM again.

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம்

மகாகவி பாரதியாரைப் பற்றி கனிமொழி எம்பி பேசிய பேச்சுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கடும் கண்டனம்
தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 


பன்னாட்டு தமிழ் நடுவத்தின் 2வது தமிழ் மாநாட்டில் கலந்து கொண்டு
உரையாற்றிய கவிஞர் கனிமொழி.


"தமிழ் மெல்லச்சாகும் என்று கூறிய பாரதிக்கு இது ஒரு அரை கூவல்
தமிழ்வாழும் அதையாராலும் அழிக்க முடியாது என்று மாணவர்கள் சூளுரை ஏற்க வேண்டும் என்று வீர உரையாற்றி இருப்பதாக வெளிவந்த பத்திரிகை செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.


பாரதியின் பாடலை பழுதுற படித்துவிட்டு, அந்த பழுத்த கவிஞன் மீது
பழிசுமத்தி இருக்கும் செயல்கண்டு நடுக்கமுற்றேன். தமிழால் பாரதி
தகுதிபெற்றதும், தமிழ் பாரதியால் தகுதிபெற்றது என தமிழ் கூறும் நல்லுலகம் ஏகோபித்த குரலால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை முழுமையாகப் படிக்காமல், முரணாகப் புரிந்து கொண்டு, அவன் காண விருப்பப்பட்ட புதுமைப் பெண்களுள் ஒருவரான நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பழிசுமத்தி இருப்பது, அந்த இறவாத கவிஞனை அவமானப்படுத்து வதாகும்.

பாரதி தன் பாடல்களுள் ஒன்றாக தமிழ்தாய் என்னும் தலைப்பில் தன் மக்களை புதிய சாத்திரம் வேண்டுதல் என்னும் உப தலைப்பில் "தாயுமாணவர் ஆனந்த் களிப்புச் சந்தமாக எழுதிய கவிதை வரிகளில் மற்ற மொழிகளுக்கு நிகரான நுட்பங்களும், மேன்மை கலைகளும் தமிழினில் இல்லை என்று தமிழ் துவேசம் கொண்ட ஒரு பேதை உரைப்பதாகவும், அந்த பெரும் பழியைத் தீர்க்க எட்டுத்திக்கும் சென்று கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று தமிழ்மக்களை தமிழ்த்தாய் வேண்டுவது போலவும் ஒரு கற்பனையான உரையாடலை கவிதை வரிகளாக்கினான். அப்பாடல் வரிகள் இதோ
 

"இன்னொரு சொல்லினைக் கேட்டேன் இனி
ஏது செய்வேன் எனதாருயிர் மக்காள்
கொன்றிடல் போலொரு வார்த்தை இங்கு கூறத்தகாதவன் கூறினன் கண்டீர்
புத்தம் புதிய கலைகள்பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கேஅந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவதில்லைஅவை
சொல்லுத் திறமை தமிழ் மொழிக்கில்லை
மெல்லத்தமிழினிச் சாகும்அந்த
மேற்கு மொழிகள் புவிமிசையோங்கும்
என்றந்தப்பேதை உரைத்தான்ஆ
இந்த வசை எனக்கெய்திடலாமோ!
சென்றிடுவீர் எட்டுத்திக்கும்கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்''

 

இது தான் அந்தப்பாடல்
இப்படி ஒரு பேதை தமிழை பதிக்க, அதற்கு வருந்திய தமிழ்த்தாய் தமிழ்
மக்களிடம் வேண்டுவதாக வந்த அந்த கற்பனைப் பாடலை தவறாக உள்வாங்கிக் கொண்டு, அந்த மாபெரும் தமிழ்க் கவிமீது பாய்ந்திருப்பது
அதிர்ச்சியளிக்கிறது. 


"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங்காணோம்'
என்றவன் பாடலை பிழையுற உணர்ந்து கொண்டு, ஒரு பெருங்கவி மீது கரும்பழி சுமத்தியிருப்பது கவலைக்குறியது. அதுவும் தொல்காப்பியப் பூங்கா தந்த முதலமைச்சரின் "தமிழ்தோட்டத்தில் பூத்த கவிஞர்' இப்படி தவறாக தமிழ்க்கவியின் மீது தகாத பொருளால் குற்றம் சுமத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Sunday, March 27, 2011

மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றிவாகை சூடும் - சரத்குமார்!

மக்கள் ஆதரவுடன் தமிழகத்தில் அதிமுக வெற்றிவாகை சூடும் என்று சமக தலைவர் சரத்குமார் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தென்காசியில் அளித்த பேட்டி:
தென்காசி தொகுதியை முன்னுதாரணமான தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். சொந்த தொகுதி என்பதெல்லாம் மாயைதான். மக்கள் பிரச்னைகளைத் தொகுதிக்கு வந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் இல்லை. விஞ்ஞான உலகில் போன், வீடியோ, இ.மெயில் என பல வகைகளிலும் எங்கிருந்தும் தொடர்பு கொள்ளலாம். என்னை வெற்றிபெற செய்தால் இதுபோன்று பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தருவேன். அதன்மூலம் என்னை மக்கள் தொடர்புகொள்ளலாம்.
பீட்டர் அல்போன்சுக்குச் சென்னைதான் தற்போது சொந்த ஊர். அவர் இங்கு வந்து போட்டியிடவில்லையா? ஏன் முதல்வரும், துணை முதல்வருமே மாற்றுத் தொகுதியில்தான் உள்ளனர். தொலைத் தொடர்பு வளர்ந்துள்ள இந்தக் காலத்தில் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள வசதி உள்ளது. நேரில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது அவசியமில்லை.
இந்தத் தொகுதியில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. அதனைத் தீர்த்து வைக்க பாடுபடுவேன். காங்கிரசாரும், பாமவினரும் என்னை விமர்ச்சிக்கின்றனர். 96ம் ஆண்டு தேர்தலில் பீட்டர்அல்போன்ஸ் என்னைப் பிரசாரத்திற்கு அழைத்துச் செல்வதற்காக காத்துக் கிடந்தார். ஆனால் இன்று என்னைத் தாக்கி பேசுகிறார்.
பாமக தலைவர் ராமதாஸ் நடிகர்களே பிடிக்காது என்கிறார். பின்னர் எதற்கு தனது குடும்ப நிகழ்ச்சிக்கு நடிகர்களைப் பத்திரிகை வைத்து அழைக்கிறார். மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பது பற்றித்தான் பேச வேண்டும். விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு நன்றாக இல்லை. விரைவில் கூட்டணி கட்சித் தலைவர்கள் இங்குப் பிரசாரத்திற்கு வருகை தர உள்ளனர். வடிவேலு விஜயகாந்தை மேடையில் தரமற்ற முறையில் விமர்சனம் செய்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
ஜெயலலிதாவின் தேர்தல் அறிக்கை முற்போக்கு திட்டங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. மக்கள் ஆதரவுடன் அதிமுக வெற்றிவாகை சூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சரத்குமார் தொகுதிக்கு ஓகே... ஜெ!

சென்னை: விஜயகாந்த் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலில் ஒப்புக் கொண்ட ஜெயலலிதா, இன்று அந்தத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். சரத்குமார் போட்டியிடும் தொகுதியில் மட்டும் அவர் பிரச்சாரம் செய்கிறார்.


அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத் திட்டம் இப்போது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

அதன்டி 30ஆம் தேதி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, செய்யார் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்கிறார்.

30ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் செல்லும் ஜெயலலிதா, அம்மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக முதலில் கூறப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விஜயகாநத் தொகுதிக்குள் செல்லாமல் அருகில் உள்ள தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார். இதேபோல் தமிழகம் முழுவதும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கு அருகாமையில் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் பெரும்பாலான தொகுதிகளில் பிரச்சாரம் செய்யாமல் ஒதுக்கிவிட்டுச் செல்கிறார்.

ஆனால் விஜயகாந்த், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். பெரும்பாலான அதிமுக தொகுதிகளில் அவர் நீண்ட நேரம் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதே நேரம் ஏப்ரல் 3ஆம் தேதி தென்காசி, சிவகாசி, தூத்துக்குடி, மதுரை ஆகிய இடங்களில் ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். அதில், தென்காசி தொகுதியில் போட்டியிடும் நடிகர் சரத்குமாருக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தென்காசி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கருப்புசாமி பாண்டியனை தோற்கடிக்க வேண்டும் என்பதாலும், கொடுத்த தொகுதிகளை மறுக்காமல் சரத்குமார் பெற்றுக்கொண்டதாலும், அவருக்கு இந்த அபார ஆதரவை ஜெயலலிதா காட்டுவதாகக் கூறப்படுகிறது.

பெரும் இழுபறிக்கு பின்னர் அதிமுக - தேமுதிக தொகுதி உடன்பாடு முடிந்ததாலும், அதிமுக போட்டியிட விரும்பிய தொகுதிகளை தேமுதிக வலியுறுத்தி பெற்றதாலும் இப்போது ஜெயலலிதா அந்தத் தொகுதிகளை புறக்கணித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
AIADMK general secretary Jayalalitha's election campaign plan has been changed completely. According to the changes, she has skipped most of the DMDK constituencies including Vijayakanth contested Rishivanthiyam.

சினிமாக்காரர்களை வெறுக்கும் ராமதாஸ் பேத்தி கல்யாணத்திற்கு கமல், ரஜினியை அழைக்கலாமா? -சரத் கேள்வி

தென்காசி: சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் கமல், ரஜினிக்கு கொண்டு சென்று கொடுத்து அழைத்தது எதற்காக என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


தென்காசி சட்டசபை தொகுதி தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய பீட்டர் அல்போன்ஸ், எங்கோ சினிமாவில் நடித்து விட்டு அரசியலுக்கு வரவில்லை என சரத்குமாரை தாக்கிப் பேசினார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்காசி சட்டசபை தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் சரத்குமார் நிருபர்களிடம் கூறியதாவது,

நான் வித்தியசமான வேட்பாளர். தென்காசி தொகுதியை வளம் மிகுந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனிமாவட்டம் அமைக்க முழு முயற்சி எடுப்பேன்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் நான் தொகுதியிலேயே இருந்து மக்கள் பணியாற்றுவேன். நான் மட்டும் தொகுதி மாறி போட்டியிடவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தொகுதி மாறியே போட்டியிடுகின்றனர். அவரவர் தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என ஜனநாயக நாட்டில் கூற முடியாது. பீட்டர் அல்போன்சும், கருப்பசாமி பாண்டியனும் சொந்த தொகுதியிலேயே போட்டியிடுகின்றனர்.

இன்றைக்கு தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் சந்திக்கலாம். வீடியோ கன்பிரன்ஸ் மூலம் சந்தித்து பேசலாம். தென்காசியில் எனக்கு முழு நேர அலுவலகம் செயல்படும். தென்காசி தொகுதியில் குடிநீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டும்.

கடந்த 1996-ம் நடந்த தேர்தலில் என் வீட்டிற்கு பீட்டர் அல்போன்ஸ் வந்து என்னை சந்தித்து தேர்தல் பிரசாரத்திற்கு அழைக்க வந்தார். சினிமாவி்ல் உழைத்து சம்பாதித்துதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். பீட்டர் அல்போன்ஸ் போல் நான் பணம் சம்பாதித்தியம் செய்ய அரசியலுக்கு வரவில்லை. மக்கள் சேவை செய்ய வந்துள்ளேன்.

சினிமா துறையினர் அரசியலுக்கு வரக் கூடாது என்று கூறும் ராமதாஸ் தனது பேத்தி திருமண அழைப்பிதழை நடிகர்கள் கமல், ரஜினிக்கு கொண்டு சென்று கொடுத்து அழைத்தது எதற்காக.

மக்களுக்கு சேவை செய்ய யார் வேண்டுமானாலும் வரலாம். இதுதான் ஜனாநாயகம். பீட்டர் அல்போன்ஸ் அரசியலுக்கு வரும் முன்னர் என்ன செய்து கொண்டிருந்தார். இது பற்றி அவர் என்னுடன் டிவியில் நேருக்கு நேர் மோத தயாரா? அப்போது அறிவாளி யார், மக்களை ஏமாற்றும் பேர்வழி யார், யார் என தெரிந்து விடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary
SMK chief Saratkumar has challenged Peter Alfonse for a word battle. He has told that he is not in politics to earn money like Peter Alfonse. He has earned enough in cinema.

Friday, March 25, 2011

தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டுவார் சரத்குமார்-ராதிகா பிரசாரம்

தென்காசி: தென்காசி தொகுதியை மாற்றிக் காட்டுவார் சரத்குமார் என்று கூறி அவரது மனைவியும், நடிகையுமான ராதிகா பிரசாரம் செய்தார்.


தென்காசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சமக நிறுவனரும், நடிகருமான சரத்குமார் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மாவட்ட செயலாளரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் போட்டியிடுகிறார்.

திமுக-அதிமுக அணிகளுக்குள் நீயா, நானா என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் அதிமுக கூட்டணியினரும், திமுக கூட்டணியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் குதித்துள்ளனர்.

கடந்த 23ம் தேதி மாலை முதல் சரத்குமார் தென்காசி தொகுதியில் அதிரடியாக களத்தில் குதித்து பஜார் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் கருப்பசாமி பாண்டியன் இன்னும் வாக்கு சேகரிப்பை தொடங்கவில்லை. ஆனால் அவருக்கு பதில் அவரது மகன் சங்கர் தேவர் வாக்குகள் அதிமுகள்ள பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சரத்குமாரின் மனைவி ராதிகா கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் குத்துக்கல்வலசை, அய்யாபுரம், வேதம்புதூர், இலஞ்சி, மேலகரம், ஆயிரப்பேரி, மந்தளம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் வாக்காளர்களிடம் பேசும்போது, தென்காசி தொகுதியை முழுமையான தொகுதியாகவும் தமிழகத்தின் முதன்மை தொகுதியாகவும், தனது கணவர் மாற்றி காட்டுவார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கி தருவார். தென்காசி மக்களுடன் தங்கி இருக்கும் வண்ணம் வாடகைக்கு வீடு பார்த்து வருவதாகவும், அதிமுகவின் தேர்தல் அறிக்கை சலுகை திட்டங்களையும் அவர் எடுத்து கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வெற்றிவாய்ப்பு பிரகாசம் - சரத்குமார் பேட்டி


தென்காசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் சமக தலைவர் சரத்குமார் கூறியதாவது: தென்காசி தொகுதிக்கு தேவையானதை அறிந்து  செய்யப்படும். உழைப்புக்கு என்றுமே வெற்றி கிடைக்கும். தென்காசி தொகுதியில் வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது என்றார்.
பின்னர் மேலரதவீதியில் தலைமை தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போது, ''ஜெயலலிதா விடுத்துள்ள தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு தேவையான பொருட்கள் எவை என்பதை அறிந்து தெரிவித்துள்ளார். நான் மட்டும் வெற்றி பெற்றால் போதாது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வரவேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர்  கரு.நாகராஜன், துணை பொதுச்செயலாளர் ஆர்கே காளிதாஸ், மாவட்ட செயலாளர் தங்கராஜ்உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.

Thursday, March 24, 2011

எம்ஜிஆர் ஸ்டைலில் தென்காசியை கலக்கிய சரத்குமார்

தென்காசி: சமக தலைவர் சரத்குமார் நேற்று எம்ஜிஆர் பாணியில் வாகனத்தைவிட்டு கீழே இறங்கி கால்நடையாக ஓட்டு சேகரித்தார்.


தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும், நடிகருமான சரத்குமார் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக சார்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் போட்டியிடுகிறார்.

சமக கட்சியின் நிறுவன தலைவரும், திமுக மாவட்ட செயலாளரும் மோதுவதால் இத்தொகுதி விஐபி தொகுதியாகிவிட்டது. இந்நிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சரத்குமார் தென்காசி நகராட்சி பகுதியான வேன் ஸ்டாண்டில் தனது பிரசாரத்தை துவங்கி யாரும் எதிர்பாராதவிதமாக வாகனத்தை வி்ட்டு இறங்கி எம்ஜிஆர் பாணியில் கடை கடையாக ஏறி இறங்கி வாக்குகளை சேகரிக்கத் துவங்கினார்.

பின் மினி பஸ், டீக்கடைகள், மருத்துவமனைகள், ஜவுளிக் கடைகள், பெண்கள் தையல் தொழிற்பயிற்சி மையம், கல்வி நிறுவனங்களுக்கு சென்று வாக்கு சேகரித்தார். சாலையில் சென்று கொண்டிருந்த மாணவ, மாணவிகளிடம் தனக்கு வாக்களிக்கும்படியும், தங்கள் குடும்பத்தினரை தனக்கு வாக்களிக்க சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார்.

அவருடன் கரு.நாகராஜன், ஆர்.கே.காளிதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

Refer: http://thatstamil.oneindia.in/news/2011/03/24/sarathkumar-surprises-tenkasi-mgr-campaign-aid0091.html

Wednesday, March 23, 2011

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சரத்குமார் நடந்தே வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.

தென்காசி: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தென்காசியில் இன்று கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாமல் வீடு, வீடாக, கடை, கடையாக ஏறி பிரசாரம் செய்தது அனைவரையும் கவர்ந்தது.


அதிமுக கூட்டணியில் சரத்குமார் கட்சி நாங்குநேரி மற்றும் தென்காசியில் போட்டியிடுகிறது. இரண்டிலும் இரட்டை இலையில் சரத் கட்சி போட்டியிடுகிறது. இதில் தென்காசியில் சரத்குமார் போட்டியிடுகிறார்.

ஸ்டார் வேட்பாளராக இருந்தபோதும் படு எளிமையாக பிரசாரத்தைத் தொடங்கி விட்டார் சரத்குமார். இன்று அவர் தென்காசியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டார். வேன் ஸ்டாண்ட் பகுதியில் வீடு வீடாக, கடை, கடையாக ஏறி அவர் பிரசாரம் செய்தார்.

50 பேர் புடை சூழ நடந்தே வாக்கு சேகரித்த சரத்குமாரைப் பார்த்து அப்பகுதியில் வியப்படைந்தனர். வழக்கமாக சாதாரண வேட்பாளர்கள்தான் நடந்து சென்று வாக்கு சேகரிப்பார்கள். சரத்குமார் போன்ற விஐபி வேட்பாளர்கள் வேன்களில்தான் பயணம் செய்வது வழக்கம்.

ஆனால் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சரத்குமார் நடந்தே வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.

அந்த வழியாக நடந்து சென்றவர்கள், பஸ்களில் சென்றவர்கள் என ஒருவரையும் விடாமல் கை குலுக்கி உங்களது சின்னம் இரட்டை இலை என்று சரத்குமார் ஓட்டு வேட்டையாடியது வித்தியாசமாக இருந்தது.

Actor Sarath Kumar campaigned in Tenkasi today. He deserted the van and choosed to walk and garnered the voters from passerby in Van stand area in Tenkasi.



Refer: http://thatstamil.oneindia.in/news/2011/03/23/sarath-kumar-walking-campaign-tenkasi-aid0091.html

தமிழகம் திருச்செந்தூர் கோயிலில் சரத்குமார்





திருச்செந்தூர்,மார்ச் 22:
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் கோயிலில் செவ்வாய்க்கிழமை சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார்.  திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை காலை 8 மணி அளவில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மனைவி ராதிகாவுடன் வருகை தந்தார்.  
பின்னர் கோயிலில் முதல் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீசம்ஹாரமூர்த்தி சந்நிதியில் சத்ருசம்ஹார மூர்த்தி யாகம் நடத்தினார்.  அதன் பின் ஸ்ரீசம்ஹாரமூர்த்திக்கு அபிஷேகம் நடைபெற்றது.  
சரத்குமார் சுவாமி தரிசனம் செய்து விட்டு செய்தியாளர்களிடம் கூறுகையில் பொதுமக்கள் நலன் கருதி இந்த யாகத்தை நடத்தியதாகக் கூறினார்.

Tuesday, March 22, 2011

தமுமுக தலைமையகத்திற்கு சரத்குமார் வருகை

தமுமுக தலைமையகத்திற்கு  19-03-2011  மாலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர். அவர்களை தமுமுக தலைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் எஸ். ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆகியோர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். இச்சந்திப்பின் போது அதிமுக தலைமையிலான கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.

சரத்குமார பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை பேசியதாவது,

நேற்று பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்கி பேசியதாவது,
தமிழகத்தில் அதிமுக சார்பில் அமைந்துள்ள கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு இரண்டு இடங்கள் கொடுத்த ஜெயலிலாதவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சரத்குமார சினிமாவில் நடிப்பாரே, தொகுதியில் இருப்பாரா, இல்லை வெற்றி பெற்று விட்டு தொகுதியை விட்டு சென்று விடுவாரா என்ற எதிர்தரப்பு கேள்விக்கு முதலில் நான் பதில் கூறுகிறேன்.

தென்காசி சட்டசபை தொகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஜாதி மத வேறுபாடின்றி அனைவருக்கும் பயன்படும் விதமாக 24 மணி நேரமும் செயல்படகூடிய தனிசெல் தொலைபேசி எண் இயங்கும். அந்த எண்ணில் நீங்கள் தொடர்பு கொண்டால் உங்களுக்கான எந்த பிரச்சனைக்கும் உங்களோடு நின்று வெற்றிகரமாக முடித்துத் தருவேன்.

உறதியாகவும், நிச்சயமாகவும் சொல்லிக் கொள்கிறேன், நான் வாரத்தில் நான்கு நாட்கள் தென்காசி தொகுதியில் தங்கியிருப்பேன். இந்க தொகுதியை தமிழகத்தின் சிறந்த தொகுதியாகவும், தொழில்வளம்,கல்வி வளம் நிறைந்த தொகுதியாகவும் அனைவரும் பாராட்டு விதத்தில் மாற்றிகாட்டுவேன்.

தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழலையும், மணல் கொள்ளை ஆட்சியையும் கூண்டோடு ஓழித்து ஜெயலலிதாவின் தலைமையில் நல்லாட்சி அமைத்திட அனைவரும் இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்றார்.

சரத்குமார் பாவூர்சத்திரம் வந்தபோது அவருடைய மனைவி ராதிகாவும் வந்திருந்தார்.

பின்னர் இரவு 11.30 மணிக்கு ஐந்தருவி இசக்கி ரிசர்ட்டில் நிருபர்களுக்கு சரத்குமார் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவச பொருட்களை அறிவித்துள்ளனர். தொடர்ந்து இலவசம் என்று அறிவித்து வருகின்றனர். இதனை நம்பி மககள் வாககளித்து ஏமாற மாட்டார்கள். ஓட்டு வங்கியை குறிவைத்து அரசியலை நடத்தி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

லஞ்சம் கொடுப்பதற்கு சமம்தான் இலவசங்களை தருவதாக அறிவிப்பது. தேர்தல் ஆணையம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காமராஜர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வண்ணம் சிலர் அக்கட்சியின் பெயரை கள்ங்கப்படுத்தி வருகின்றனர். எங்கே இருக்கிறது அந்தக் கட்சி. அந்த கட்சி அனுமதி பெற்ற கட்சியா....தேர்தலில் வெற்றி தோல்வி என்பது ஜனநாயக முறை. அதை விடுத்து அவமானம் ஏற்படுத்த துடிப்பது நாகரீகம் அல்ல. அவர்கள் போட்டியிடும் சின்னத்தில்,தொகுதியில் வெற்றி பெறட்டு்ம். அதை விடுத்து என்னை தோற்கடிப்பேன், என்று மல்லுகட்டுகின்றனர். யாராக இருந்தாலும் முதுகில் குத்தாமல் நேருக்கு நேர் மோதி பார்க்கட்டும். அதுதான் வீரனுக்கு அழகு.

தொன்காசி தொகுதியில் 4 நாள் தங்கியிருந்து பணியாற்றுவேன். ச.ம.க. 3 மாதத்துக்கு முன்பே சர்வதிகார ஆட்சியை அகற்றிட வேண்டும் என்ற முடிவோடு கொள்கை,கூட்டணி பற்றி அறிவித்தது. அப்படிதான் தற்போது கூட்டணி அமைந்துள்ளது.

சரத்குமார் மீது போலீசார் இரண்டு இடங்களில் வழக்குபதிவு

திருநெல்வேலி :
 சைகை காட்டிச்சென்ற நடிகர் சரத்குமார் மீது போலீசார் இரண்டு இடங்களில் வழக்குபதிவு செய்தனர்.  நேற்றுமுன்தினம் இரவில் தென்காசியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் நடிகர் சரத்குமார் தென்காசியில் இருந்து குற்றாலம்நோக்கிசென்றார். அப்போது இரவு 10 மணி கடந்துவிட்டது. ஓட்டுகேட்கமாட்டேன், தலைவர்களின் சிலைகளுக்கு மாலையணிவித்துவிட்டு செல்வதாக கூறிச்சென்றார். தென்காசியில் வருவாய் ஆய்வாளர் சவுந்தரராஜன் புகாரின் பேரிலும், குற்றாலத்தில் எஸ்.ஐ.,சமுத்திரம் புகாரின் பேரிலும் இரண்டு இடங்களிலும் வழக்குபதிவு செய்யப்பட்டது. சரத்குமார், நெல்லைமாவட்ட அ.தி.மு.க.,செயலாளர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மீது 143 (கூட்டமாக வருதல்), 188 (தடையை மீறி வருவதல்) ஆகிய செக்ஷன்களில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

தென்காசி, மார்ச் 22: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மீது தென்காசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பி.செந்தூர்பாண்டியன் உள்ளிட்ட மேலும் 200 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  தென்காசி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, அக் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முதன்முறையாக தென்காசி நகர் பகுதிக்கு தனது ஆதரவாளர்களுடன் திங்கள்கிழமை வந்தார். தென்காசி கீழப்புலியூரில் உள்ள தேவர் சிலை, தென்காசி மலையான்தெருவில் உள்ள தேவர் சிலை, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அப்போது இரவு 10 மணியை தாண்டியிருந்ததாலும், வெடிகள் வெடித்தும், மேள தாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டதாலும், தேர்தல் விதிமுறைகளை மீறியதாக சரத்குமார், புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலர் பி.செந்தூர்பாண்டியன் மற்றும் 200 பேர் மீது தென்காசி போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 குற்றாலம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட நன்னகரத்தில் அம்பேத்கர் சிலை, குற்றாலத்தில் அண்ணா சிலைக்கு ச.ம.க., அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். அவர்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக குற்றாலம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Monday, March 21, 2011

மார்ச் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல்-சரத்குமார்

திருநெல்வேலி, மார்ச் 21: 
 அ.தி.மு.க. கூட்டணியில் தென்காசி, நான்குனேரி ஆகிய 2 தொகுதிகளைப் பெற்றுள்ளது ச.ம.க. இதில் தென்காசி தொகுதியில் அக் கட்சியின் தலைவரான சரத்குமார் போட்டியிடுகிறார்.  

வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் தென்காசி செல்லும் வழியில் திருநெல்வேலியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:  பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால்தான் தமிழ்நாட்டில் நல்லாட்சி மலரும்.  

அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி அந்த வெற்றியைப் பெறும். அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு, உறுதியோடு கடினமாக உழைத்து வெற்றிக் கனியை பறிப்போம்.  

தென்காசி தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் எனற எண்ணத்தில்தான் எனது நடிப்புத் தொழிலை ஏற்கெனவே குறைத்துக் கொண்டேன். ஆனால், அது மட்டுமே காரணம் அல்ல. இப்போது திரைப்படத் தொழிலை ஒரு குடும்பம் கையில் எடுத்துக் கொண்டு நடத்தி வருகிறது. நான் எனது நடிப்புத் தொழிலை குறைத்துக் கொள்ள அதுவும் ஒரு காரணம்.  

தென்காசி தொகுதியில் நான் வெற்றி பெற்றால் வெளியூருக்கு ஓடிவிட மாட்டேன். வாரத்தில் திங்கள் முதல் வியாழன் முடிய நான்கு நாள்கள் தொகுதியில் இருந்து மக்கள் பணி செய்வேன். தொகுதி மக்களின் தேவை அறிந்து அதை நிறைவேற்றி கொடுப்பேன். 

 நான் மார்ச் 24-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறேன். இன்றே எனது பிரசாரம் தொடங்கி விட்டது. 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்ய ஆசைதான். ஆனால் காலம் குறைவாக உள்ளது. எனவே, முடிந்த அளவு தொகுதிகளில் பிரசாரம் செய்வேன்.  என்றார் சரத்குமார்.

சட்டசபை தேர்தல்: இன்று முதல் தென்காசியில் சரத்குமார் பிரசாரம்

தென்காசி: தென்காசி சட்டசபை தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (21-ம் தேதி) தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரசாரத்தை துவங்குகிறார்.


அதிமுக கூட்டணி சார்பில் தென்காசி சட்டசபை தொகுதியி்ல் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (21-ம் தேதி) காலை நெல்லை வந்து கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். காலை 11 மணிக்கு பாவூர்சத்திரம் வரும் சரத்குமாருக்கு சமக மற்று்ம் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவி்த்து பிரசாரத்தை துவங்குகிறார்.

இதைத்தொடர்ந்து சுரண்டையில் உள்ள அண்ணாத்துரை சிலை, சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். கீழப்புலியூர் முத்துராமலிங்கத் தேவர் சிலை, மேலகரம், நன்னகரத்தில் உள்ள அம்பேத்கார் சிலை, குற்றாலத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தென்காசி சட்டசபை தொகுதியில் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

நாளை (22-ம் தேதி) காலை 9 மணிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் விசேஷ பூஜை செய்து வழிபடுகிறார். வரும் 23-ம் தேதி காலை தென்காசி இசக்கி மஹாலில் அதிமுக கூட்டணி கட்சியை சேர்நத செயல்வீரர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பேசுகிறார். ஏற்பாடுகளை அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
English summary
SMK chief Sarath Kumar starts his election campaign today from Tenkasi constituency. He will be given grand reception by ADMK and SMK partymen. He will garland great leaders's statue in that area and will discuss about the campaign with the alliance parties' leaders.

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே

காமராஜரை விட்டால் ஆள் இல்லை:""தோழர்களே... எனக்கு 82 வயதாகிறது. நான் எந்த நேரத்திலும் இறந்து விடலாம். ஆனால், நீங்கள் இருப்பீர்கள். உங்களை விட வயதில் முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போல ஒன்றைக் கூறுகிறேன். மரண வாக்குமூலம் கூறும் நிலையில் இருப்பவன், பொய் கூற வேண்டிய அவசியமில்லை.
""மூவேந்தர்கள், நாயக்க மன்னர்கள், மராட்டிய மன்னர்கள், முஸ்லிம்கள், வெள்ளையர் என நம்மை பலர் ஆண்டிருந்தும், இன்றைய காமராஜ் ஆட்சியில் தமிழகம் அடைந்துள்ள முன்னேற்றம், எப்போதும் ஏற்பட்டதில்லை. நம்மை ஆட்சி புரிந்தவர்கள் எல்லாம், கல்விக்கு என்று எதுவும் செய்யவில்லை.
""தோழர்களே... என் சொல்லை நம்புங்கள்... இந்த நாடு உருப்பட வேண்டுமென்றால், இன்னும் 10 ஆண்டுகளாவது, காமராஜை விட்டு விடாமல் பிடித்துக் கொள்ளுங்கள்; அவரது ஆட்சி மூலம் சுகமடையுங்கள். காமராஜை பயன்படுத்திக்கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு வாழ்வளிக்க வேறு ஆளே கிடையாது!'(9.7.1961ல், தேவகோட்டையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில், தற்போது ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் உள்ள கழகங்களுக்கு, "பிதாமகனாக' இருக்கும் ஈ.வெ.ரா., பேசியது.)

Sunday, March 20, 2011

தென்காசியில் சரத்குமார் போட்டி

சென்னை, மார்ச் 19-  

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.அதிமுக கூட்டணியில் அவரது கட்சிக்கு தென்காசி, நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், சரத்குமாரும் எர்ணாவூர் நாராயணனும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணனை சந்தித்துப் பேசினர். 

சென்னை: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி க்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 இடங்களில் தென்காசியில் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து சரத்குமார்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தென்காசி, நாங்குநேரி தொகுதிகளில் அகில இந்திய சமத்துவக் கட்சி போட்டியிடுகிறது.

கட்சியின் உயர் நிலைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தென்காசியில் நானும் (சரத்குமார்), நாங்குநேரியில் கட்சியின் தலைவர் ஏ. நாராயணனும் போட்டியிட இருக்கிறோம்.

அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெற எங்கள் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பாடுபடுவார்கள் என்று கூறியுள்ளார்.

லாஜிக் இல்லாத மேஜிக்


ஜாதியை மறந்து ஓட்டு:நாடார் இளைஞர் பேரவை அறிவிப்பு

மதுரை:"அனைத்து தொகுதிகளிலும் ஜாதியை மறந்து, யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து ஓட்டளிப்பது' என்று, நாடார் இளைஞர் பேரவை முடிவு செய்துள்ளது.இப்பேரவையின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் நேற்று, பொதுச் செயலர் வி.என். ராஜசேகரன் தலைமையில் நடந்தது.
கூட்ட முடிவுகள் குறித்து, அவர் கூறியதாவது:பெருந்தலைவர் மக்கள் கட்சியினர், அனைத்து நாடார் சங்கங்களையும் அழைத்துப் பேசி, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு எடுத்ததாகக் கூறியுள்ளனர். ஆனால், எங்களை அழைக்கவில்லை. மறுநாள் என்னை தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டனர். எங்களிடம் கலந்து ஆலோசிக்காத போது, ஆதரவு கேட்பது என்ன நியாயம்?எங்களையும் அழைத்தால் "சீட்' பிரச்னை எழும் என கருதியே, புறக்கணித்துள்ளனர். அக்கட்சி நிர்வாகிகள் சிலர் சுயநலமிக்கவர்கள். இதன் காரணமாக, அனைத்து தொகுதிகளிலும் யார் வல்லவர், நல்லவர் என்பதை அறிந்து, ஜாதியை மறந்து, ஓட்டளிப்பது என தீர்மானித்துள்ளோம். மாற்று கட்சிகள் ஆதரவு கேட்கும்பட்சத்தில், பொதுக்குழுவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு ராஜசேகரன் கூறினார்.பொருளாளர் பால்பாண்டி, துணை செயலர் அருண், நகர் தலைவர் சிவபாலன், செயலர் திருப்பதி, தங்கராஜ் உடனிருந்தனர்.

Friday, March 18, 2011

என்னைத் தூற்றினால், நடப்பதே வேறு: சமக தலைவர் சரத்குமார் ஆவேசம்

நெல்லை: என்னைப்பற்றி தூற்றினால் நடப்பதே வேறு என்று சமத்துவ மக்கள் கட்சி த் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.



அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சமக தலைவர் சரத்குமாருக்கு பாராட்டு விழா நேற்று பாளை நூற்றாண்டு மண்டபத்தில் நடந்தது. அதற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார். கூட்டத்தில் சரத்குமார் பேசியதாவது,

சமத்துவ மக்கள் கட்சியின் மூலம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்க நான் பாடுபட்டு வருகிறேன். நான் அனைவரையும் அரவணைத்து செல்பவன். அதற்காக என்னை பலவீனமானவன் என எண்ணி விட வேண்டாம். நான் துரோகம் செய்ததாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர். நான் யார் சொத்தையும் எடுத்துச் செல்லவில்லை.

என்னிடம் இருக்கும் பணம் நான் சினிமாவில் உழைத்து சம்பாதித்தது. திரைமறைவில் இருந்து நான் ஒருக்காலும் போராட மாட்டேன். பின்னால் இருந்து யார் முதுகிலும் குத்த மாட்டேன். மெர்க்கன்டைல் வங்கியை மீட்க சமுதாயத்தில் இருந்து அழைத்தபோது நான் மறு பேச்சு பேசாமல் சென்றேன். மும்பையில் காமராஜர் பெயரில் கட்டிடம் கட்ட என்னை அணுகியபோது ரூ.5 லட்சம் வழங்கினேன்.

ஆனால் என்னை அழைக்காமலேயே அக்கட்டிடத்திற்கு திறப்பு விழா நடத்திவிட்டனர். நல்லவர்களை தூற்றாதீர்கள். சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு அறுகதை இல்லை. என்னை சீண்டி பார்த்தால் சொந்த பந்தங்களை கூட நான் பகைத்து கொள்ள தயங்க மாட்டேன். நடப்பதே வேறு. சரத்குமார் நின்றாலும் தோற்கடிப்போம் என சிலர் கூறுகிறார்கள். தோற்பதால் மட்டும் எனது வேகம் குறைந்து விடாது.

எந்த காலத்திலும் எனது மக்கள் பணி தொடரும். பெருந்தலைவர் மக்கள் கட்சி என அவர்கள் துவங்க நினைக்கும்போது சமக பெயரில் போட்டியிடுவேன் என என் கருத்தை தெரிவித்தேன். முதல் நாள் கட்சி துவங்கி விட்டு மறுநாள் என்னை நீக்கி விட்டார்கள். சமகவை அழிக்க சூழ்ச்சி நடக்கிறது. சமகவை அழிக்க நினைத்தால் அது ஒருக்காலும் நடக்காது என்றார்.

8 கோடி மக்களைத்தான் நம்பியுள்ளோம்-சரத் குமார்

வறுமை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற சிந்தித்து வருகிறோம். அதற்காக தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களைத்தான் நம்பியுள்ளோம் என்று தூத்துக்குடியில் நடந்த சமத்துவ மக்கள் கட்சி யின் முப்பெரும் விழாவில் அதன் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கட்சியின் 4-வது ஆண்டு துவக்க விழா, சரத்குமார் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. விழாவி்ல் நலத்திட்ட உதவிகளை வழங்கி சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார் பேசியதாவது,

தூத்துக்குடி உப்பளம் நிறைந்த ஊர். உப்பிட்டவரை உயிருள்ளவரை நினை என்று சொல்வார்கள். அது போல நான் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

சமத்துவ மக்கள் கட்சி வெற்றிப் பாதையை நோக்கிச் செல்கிறது. காமராஜர் தான் படிக்காவி்ட்டாலும், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். சீரிய கல்விச் சேவையை செய்தவர்.

காமராஜரின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டதுதான் சமத்துவ மக்கள் கட்சி. 31.08.2007ல் இந்த கட்சியை துவங்கியபோது பலர் ஏளனம் செய்தனர். தமிழகத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் சமக. துவக்கத்தில் பல கொள்கைகளை அறிவித்த கட்சிகள் இன்று கொள்கைகளே இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

கடந்த பொதுத் தேர்தலில் நாங்கள் தோல்வி அடைந்தாலும், பெற்ற வாக்குகள் அதிகம். மக்கள் எங்களை உற்று நோக்கி வருகின்றனர். எங்களது கொள்கைகள், தீர்மானங்கள் எல்லாம்தான் தமிழகத்தில் சட்டமாகி வரும் நிலை உள்ளது. வெற்றி என்பது மெதுவாகத்தான் கிடைக்கும்.

காமராஜர் அமைத்து தந்த அஸ்திவாரத்தில் இந்த கட்சி செயல்பட்டு வருகிறது. அவரது பண்புகளை பின்பற்றி நடக்கிறது. தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்கின்ற நேரம் இது. 8 கோடி மக்களை மட்டுமே நாங்கள் நம்பியுள்ளோம்.

தமிழகத்தை வறுமை இல்லாத மாநிலமாக மாற்ற சிந்தித்து வருகிறோம். எங்கள் கட்சியால் தமிழகத்தில் நல்ல ஆட்சி உருவாக்கப்பட்டது என்ற நிலை வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

16ல் சரத்குமாருக்கு பாராட்டு விழா: நாடார் சங்கங்கள் பேரவை

நெல்லை: வரும் 16-ம் தேதி சமத்துவ மக்கள் கட்சி  தலைவர் சரத்குமாருக்கு பாளை நூற்றாண்டு மண்டபத்தில் பாராட்டு விழா நடத்துவது என்று நாடார் பேரவை முடிவு செய்துள்ளது.


நெல்லை ஜங்ஷனில் அனைத்து நாடார் சங்கங்களின் பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அனைத்து நாடார் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் சபாபதி நாடார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் மாநகர் மாவட்ட செயலாளர் கணேசன், மகளிரணி செயலாளர் சுபலதா, கிழக்கு மாவட்ட செயலாளர் தங்கராஜ், செல்வராஜ், வைத்தியலிங்கம், சவுந்திரபாண்டியன் உள்பட பலர் பேசினர்.

அதிமுக கூட்டணியில் நாடார் சமுதாயத்திற்கு 2 இடங்கள் ஒதுக்கிய ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பது, வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தென்மாவட்ட தொகுதியில் போட்டியிட வேண்டும், பாளை நூற்றாண்டு மண்டபத்தில் வரும் 16-ம் தேதி சரத்குமாருக்கு பாராட்டு விழா நடத்துவதும், அதில் நாடார் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொள்வதும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Monday, March 14, 2011

கருணாநிதி பற்றி அண்ணா

கருணாநிதி பற்றி அண்ணா -
" நாங்கள் திராவிடர் கழகத்தில் இருந்தபோது திருவாரூருக்கு ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அப்போது ஒரு மாணவனாக இருந்த கருணாநிதியை அங்கே சந்தித்தேன். அந்தப்பருவத்திலேயே அவனுடைய குறும்புத்தனமான பேச்சு எனக்கு கோபத்தை உண்டாக்கியது. அதே நேரத்தில் வியப்பாகவும் இருந்தது. அப்போது என்னருகிலேயே தம்பி சம்பத்தும் இருந்தான்.

திரும்பிசெல்லும்போதும் கூட கருணாநிதி பற்றி சம்பத்திடம் பேசிக்கொண்டே போனேன். அதன் பிறகு ஒரு சிறிய பத்திரிக்கையின் மூலம் அவன் திராவிடக் கழக தோழர்களுக்கு அறிமுகமானான். அந்தப் பத்திரிக்கையின் பெயரும் 'முரசொலி' தான். சிறு வயதிலேயே அவனிடம் எழுத்துக் கவர்ச்சி இருந்தது. அதே நேரத்தில் கவர்ச்சிகரமாகவும் உருக்கமாகவும் பேசப் பழகி வைத்திருந்தான். கலைத்துறையில் ஈடுபாடிருந்ததால் ஜனங்களுக்கு அறிமுகமானான்.

1949 -ல் திராவிடர் கழகத்தை விட்டு நாங்கள் பிரிந்து தி மு க ஆரம்பித்தபோது முன்னணியிலிருந்த முக்கியஸ்தர்களில் ஒருவனாக அவன் விளங்கினான். என்னைப் பற்றி பேசிப்பேசியே அவன் தன்னை வளர்த்துக்கொண்டது ஒரு வகையான திறமையும் சாமர்த்தியமும் ஆகும். கலைத்துறை ஈடுபாடு அவனை வெகுவிரைவில் தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்திவிட்டது. கடுமையாக உழைப்பான். எதிலும் தானே முன்னணியில் நிற்க வேண்டுமென்று ஆசைப்படுவான்.

இந்த நேரத்தில் இங்கிலாந்து அரசியல் பிரமுகர் ஒருவரைப் பற்றி அவர் மகன் சொன்ன கருத்து என் நினைவுக்கு வருகிறது, " பாருங்கள்! என் தந்தை பிரசவித்த வீட்டுக்குப் போனால் தானே குழந்தையாக இருக்க ஆசைப் படுகிறார். பொதுச் சபைகளுக்குப் போனால் தானே தலைவனாக இருக்க ஆசைப் படுகிறார். கல்யாண வீட்டுக்குப்போனால் தானே மாப்பிள்ளையாக இருக்க விரும்புகிறார். கருமாதி வீட்டுக்குப் போனாலும் தானே பிணமாக இருக்க ஆசைப் படுகிறார்" என்றாராமவர்! கருணாநிதியின் சுபாவம் அப்படிப்பட்டது. அவனது உழைப்பை ஆசை முந்திக்கொண்டு போகிறது.

தன் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள எந்த வழியையும் கடைப்பிடிப்பது அவனுடைய சுபாவம், .அதிலே தோல்வியுற்று அவமானப்பட நேர்ந்தால் அதையும் ஜீரணிப்பது அவன் பழக்கம். தனக்கு விளக்கு தூக்குகிறவர்கள் மட்டுமே நண்பர்களாக இருக்க முடியுமென்பது அவன் சித்தாந்தம். பிறரை தூண்டிக் காரியம் செய்வான். கலகம் செய்வான். தான்தான் காரணம் என்பதைக் காட்டிக் கொள்ள மாட்டான், கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதற்கு அவன் உண்டாக்கிய கலகமே காரணம். அவர்களெல்லாம் என்னை விசுவாசித்தவர்கள்.

அவர்களெல்லாம் போன பிற்பாடு என்னையே அவன் ஆட்டிப்படைக்கத் தொடங்கினான். கட்சிக் கட்டுப்பாடுக்காக அதை வெளியே சொல்ல நான் தயங்கினேன். கட்சி எப்படிப்போனாலும் பதவிக்கு வந்தாக வேண்டுமென்று கூட்டணி சேர்ப்பதில் அவன்தான் முன்னணியில் இருந்தான். பதவிக்கு வந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலாகா பிரித்துக் கொடுத்தேன். இந்த இருபத்திமூன்று மாதங்களில் மற்ற மந்திரிகளுக்கும் சில இலாக்காக்கள் இருப்பதாகவே அவனுக்கு நினைவில்லை. எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினான்.


போலீஸ் மந்திரி நான். உத்திரவிடுவது அவன். சகிக்கும்மட்டும் சகித்துப் பார்த்தேன். இனி சகிக்க முடியாது என்ற நிலை வந்தபோது - இறைவா, நீ வாழ்க - நீ என்னை அழைத்துக்கொண்டு விட்டாய். அனுசரித்த சம்பிரதாயங்களின் படி முதலமைச்சராக வேண்டிய நெடுஞ்செழியனை இப்போது அவன் ஒதுக்கித் தள்ளி விட்டான். நானிருக்கும் காலத்தில் தன் குடும்பக் கவலைகளைக் கூட நெடுஞ்செழியன் என்னுடன் தான் பகிர்ந்து கொள்வான். இப்போது யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் அவன் சொல்ல முடியம். அவனைப்போல என் கட்சியில் என்னை நேசித்தவர்கள் எல்லாம் இனி உள்ளுக்குளேயே புழுங்கிச் சாவதைத் தவிர வேறு வழி என்ன? கருணாநிதியின் கையில் ஆட்சி வந்து விட்டது. நான் இல்லை என்ற நினைப்பிலாவது அவனுக்கு பொறுப்புணர்ச்சி வரவேண்டும். சேறு மிதிப்பது போல ஆட்சியை நடத்தக் கூடாது. அவன் என்ன செய்யப் போகிறானோ? போதாக் குறைக்கு ஆதித்தன் வேறு பங்காளியாகி இருக்கிறான். நான் இருக்கும்போது ஆதித்தனை ஒதுக்கியே வந்தேன்.

இனி எவனும் ஆட்டம் போடுவான். இனி ஜனங்களிடமிருந்தும் கிஞ்சித்தும் அனுதாபத்தை அவர்கள் பெறமுடியாது. -- மனிதன் பேசி முடித்தான்; தேவன் விடைப் பெற்றுக்கொண்டான். பிகு: கண்ணதாசன் அவர்கள் சி. என். அண்ணாதுரை அவர்கள் மறைந்த பின் தன் பத்திரிக்கையில் சில கடிதங்கள் எழுதினார். அவை தொகுக்கப்பட்டு 'சொர்க்கத்தில் அண்ணா' என்று பெப்ரவரி 28 - 1969 அன்று ஒரு சிறு புத்தகமாக கண்ணதாசனுடைய தம்பி இராம முத்தையா அவர்களால் வெளியிடப்பட்டது. அப்புத்தகத்தில் 'கருணாநிதி பற்றி அண்ணா' என்று 37-40 பக்கங்களில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரையே இது. உங்களால் முடிந்த உதவி, ஏப்ரல் 13ஆம் தேதி ஓட்டு போட வேண்டும். யாருக்கு என்று நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்!

Thursday, March 10, 2011

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்



சென்னை, மார்ச்.10: அதிமுக கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.தமிழக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 13-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுகவும், அதிமுகவும் தங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தீவிரமாக உள்ளன.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்குமார், இன்று திருநெல்வேலி மாவட்டம், பாவூர் சத்திரம், வட்டார நாடார் சங்கத் தலைவர் ஆர்.கே. காளிதாசன் உள்ளிட்டோருடன் பிற்பகல் 3.30 மணியளவில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டுக்குச் சென்று தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவருடன் ஆலோசனை நடத்தினார்.இந்நிகழ்வின் போது, அதிமுக பொருளாளர்  ஓ. பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன் ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார் அதிமுக கூட்டணியில் தங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.