Tuesday, June 28, 2011

சரத்குமார் திருமண வாழ்த்து

சென்னை, ஜூன்.28:

தமிழக சட்டத்துறை அமைச்சர்  இசக்கி சுப்பையா தங்கை மகள்  டி.ராஜேஸ்வரிஎம்.சுரேந்தர் என்கிற சுரேன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி தலைவரும் தென்காசிதொகுதி எம்எல்ஏவுமான ஆர்.சரத்குமார்,  அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் நேரில் சென்று மண மக்களை வாழ்த்தினார்கள்.
.
தமிழக சட்டத்துறை அமைச்சர்  இசக்கி சுப்பையா தங்கை டி.மகேஸ்வரி பி.திருமலைகுமார் தம்பதியரின் மகள் டி.ராஜேஸ்வரி, திருவொற்றியூர் சுரேன் ஸ்டீல் உரிமையாளர் எஸ். முருகேசன்எம்.ஜெயலட்சுமி தம்பதியரின் மகன் எம்.சுரேந்தர் என்கிற
சுரேன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அரும்பாக்கம் 100 அடி  சாலையில் உள்ள ஐஸ்வர்யா
மஹாலில் நடைபெற்றது.  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும், தென்காசி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவுமான ஆர்.சரத்குமார், அவரது மனைவி
ராதிகா சரத்குமார், அமைச்சர் இசக்கி சுப்பையா ஆகியோர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினர்.

சரத்குமாருடன் சமத்துவ மக்கள் கட்சி துணை தலைவர் ஏ.நாராயணன் எம்எல்ஏ, பொது செயலாளர் கரு.நாகராஜன், தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் அமுதன், நிர்வாகிகள் ஆதித்தன், முருகானந்தம், சைதை மூர்த்தி, பெருமாள் உள்ளிட்டோரும் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவி, திரைப்பட தயாரிப்பாளர் ராம்
குமார், இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், சந்தானபாரதி, நடிகர்கள் பிரபு, விக்ரம், பரத், ஜெயம்ரவி, அருண்பாண்டியன் எம்எல்ஏ, விவேக், சக்தி  மற்றும் முன்னாள் எம்.பி.மலைச்சாமி உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.  

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தந்தையும், குற்றாலம் இசக்கி ஹைவே ரிசார்ட்ஸ் தலைவருமான இசக்கி பாண்டியன், அமைச்சரின் அண்ணன் இசக்கி சுந்தர், மற்றும் எஸ்.வேலாயுதம், சதீஷ், முல்லை ராஜா, சுரேஷ், மைக்கேல் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து மணமகன் இல்லம் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 30ந்தேதி அன்று மாலையில்  மாதவரம் ராம்லட்சுமி பேரடைஸில் நடைபெறுகிறது. 

முதல்வருடன் சரத்குமார் சந்திப்பு

சென்னை, ஜூன்.28: 

இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்த தென்னிந்திய நடிகர் சங்கம் திட்டமிட்டுள்ளது.முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியதாவது:  தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம். இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம். 

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டோம்.மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம். இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு நடத்தலாம் என்று அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் சென்னையை அடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட முன்பணம் தர மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே எங்களுக்கு நிலம் தர வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று சரத்குமார் கூறினார்.

Sunday, June 19, 2011

ரேஷன் பொருட்கள் வினியோகம் முறைகேடு வேண்டாம்:- சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள்

தென்காசி : "ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்வதில் முறைகேடு வேண்டாம்' என தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமார் கூறியுள்ளார்.

 ரேஷன்  அட்டை உள்ளவர்களுக்கு 20 கிலோ ரேஷன் அரிசி இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதில் முறைகேடுகள் ஏதும் நடக்க கூடாது என முதல்வர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் தென்காசியில் உள்ள ஒரு ரேஷன் கடையில் ரேஷன் அரிசி வாங்க செல்லும் பொதுமக்களிடம் மாற்று பொருட்கள் ஏதேனும் வாங்கினால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என ரேஷன் கடை ஊழியர் கூறியுள்ளார். இதுபற்றி தென்காசி எம்.எல்.ஏ.சரத்குமாரிடம் பொது மக்கள் புகார் கூறினர்.

இதனையடுத்து எம்.எல்.ஏ.சரத்குமார் குறிப்பிட்ட ரேஷன் கடைக்கு சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது சரத்குமார் கூறும்போது, ""தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானது இலவச அரிசி வழங்கும் திட்டம். இதன் முழு பலன் ஏழைகளுக்கு எவ்வித இடையூறுமின்றி கிடைக்க வேண்டும் என்பதில் முதல்வர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அரிசி வழங்கும் போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதல்வர் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும். ரேஷன் கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்'' என்றார். ரேஷன் கடை ஊழியர்களும் தவறு ஏதும் ஏற்படாமல் ரேஷன் பொருட்களை வினியோகம் செய்கிறோம் என்று உறுதியளித்தனர்.அதன் பிறகு சரத்குமார் அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

Friday, June 17, 2011

தென்காசி ரேஷன் கடையில் நேற்று சரத்குமார் எம்எல்ஏ அதிரடி ஆய்வு

தென்காசி ரேஷன் கடையில் நேற்று சரத்குமார் எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் நேற்று தென் காசி நகர்ப்பகுதியில் நன்றி தெரி வித்து பேசினார். கொடிமரம் பகுதியில் நன்றி தெரிவித்துக்கொண்டிருந்தபோது அந்த பகுதி ரேஷன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த மக்கள் ரேஷன் கடையில் மாற்றுப்பொருட்கள் வாங்கினால்தான் அரிசி கொடுக்கப்படும் என்று வற்புறுத்துவதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று அங்கிருந்த பணியாளர்களிடம் இதுகுறித்து விசாரித்தார்.

பின்னர் பணியாளர்களிடம், தமிழக முதல்வர் ஏழை மக்களுக்காக நிறைவேற்றி வரும் திட்டங்களில் முதன்மையானவை இலவச அரிசி வழங்கும் திட்டமாகும்.

அரிசி வழங்கும்போது தொகுதி மக்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமலும் எவ்வித குறைவுமின்றி சிறப்பாக செயல்பட்டு முதலமைச்சரின் திட்டத்தை செயல்படுத்திட ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கல்வியை வியாபாரமாக்கக் கூடாது- தென்காசியில் சரத்குமார் பேச்சு

தென்காசி:

கல்வி முற்றிலும இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபாரமாக்கக் கூடாது என்று தென்காசியில் சரத்குமார் எம்எல்ஏ பேசினார்.

தென்காசியில் அரசு பொது நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் தென்காசி கல்வி மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளில் 10 வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி பேசியதாவது,

அறிவாற்றலை வளர்த்து கொள்ள நூலகம் பெரிதும் உதவுகின்றது. மாணவ, மாணவிகள் பல மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் தாய் மொழியை பேசுவதில் பெருமை கொள்ள வேண்டும்.

தாய்மொழியை நேசிப்பவனால்தான் தாய்நாட்டை நேசிக்க முடியும். தென்காசி தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்றுவேன். 50 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனையாக இருக்கிறது.


கல்வி இலவசமாக்கப்பட வேண்டும். எவ்வளவு சிக்கரம் முடியுமோ அவ்வளவு சிக்கரம் அது நடந்தே ஆக வேண்டும். கல்வி வியாபாரம் ஆவது வளரும் நாட்டுக்கு நல்லதல்ல. சிறந்த மாணவ, மாணவியர்தான் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்றார்.

Friday, June 10, 2011

தென்காசியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம்: சரத்குமார் கோரிக்கை

சென்னை, ஜூன் 9: தென்காசியை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பேரவைக் குழுத் தலைவரும், அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சரத்குமார் கோரிக்கைவிடுத்தார். 

பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தீர்மானம் மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்று அவர் பேசியது: நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 11 தாலுகாக்கள் உள்ளன. இதில் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 6 தாலுகாக்களைக் கொண்டு நெல்லை மாவட்டமும், தென்காசி உள்ளிட்ட 5 தாலுகாக்களைக் கொண்டு தென்காசி மாவட்டமும் உருவாக்கலாம். தென்காசி மருத்துவமனை 36 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ நிபுணர்களை நியமிப்பதோடு, மருத்துவக் கல்லூரியை அமைப்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். பழங்களைப் பாதுகாக்க குளிர்பதனக் கிடங்கை அமைப்பதுடன், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தையும் கட்ட வேண்டும். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ்ந்தால்தான் தொழில் வளர்ச்சி இருக்கும். எனவே, காவல்துறையை நவீனமயமாக்க வேண்டும். இப்போது தமிழகத்தில் 632 பேருக்கு 1 போலீஸ்காரர் என்ற விகிதம் உள்ளது. போலீஸாரின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். மேலும் அவர்களுக்குப் பொருளாதாரச் சலுகைகளும் வழங்க வேண்டும். 

புதிய தலைமைச் செயலகம்: புதிய தலைமைச் செயலகம் மிகுந்த பொருள்செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையெல்லாம் முடிந்தபிறகு, அதை அருங்காட்சியகமாகவோ, கருத்தரங்கு கூடமாகவோ பயன்படுத்த வேண்டும். சமச்சீர் பாடத்திட்டத்தை சீரமைக்க குழு நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன். கிராமப்புற, நகர்ப்புற மாணவர்களின் இடையே இடைவெளியைக் குறைக்கும் வகையில் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். 

நூலகங்களை சீரமைத்து, காலியாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் எதிர்காலத்தில் நமது நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படலாம். இந்தியாவை உணவுக் களஞ்சியமாக மாற்றும் வகையில் திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். 

விவசாயத்துக்கு என்று தனி பட்ஜெட் அறிவிக்க வேண்டும். கச்சத் தீவை மீட்க ஆதரவு: இந்தியாவின் பாதுகாப்புக்காக கச்சத் தீவை மீட்பது அவசியம் ஆகும். எனவே, கச்சத் தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கிறோம்.

Thursday, June 9, 2011

வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் விழிப்புணர்வு பிரசாரம்: சரத்குமார் வேண்டுகோள்

ஆம்னி பஸ் விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, வேலூர் அருகே அவலூரில் ஏற்பட்ட பஸ் விபத்தில் தீயில் கருகி 22 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


சாலை வசதிகள் மேம்பட்ட பிறகு வேகக் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் வாகனங்களால் இதுபோன்ற விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் அமைச்சர் ஒருவரை இழக்க நேரிட்டது.


வேகக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் விழிப்புணர்வு பிரசாரத்தை வாகன ஓட்டுநர்களிடம் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, June 7, 2011

மேலவை ரத்து: பேரவையில் தீர்மானம்



ÙNÁÛ], ^ØÁ.8-

NyPNÛT›¥ ÚU¥NÛT ˜zÛY ÛL«|• ˆŸUÖ]†‡¼h T¥ÚY¿ Lyp›]£• TÖWÖy| ÙR¡«†R]Ÿ. TR« BÛN LÖWQUÖLÚY LP‹R Byp›¥ ÙLց|YWTyPRÖL°• ÙR¡«†R]Ÿ.

NyPNÛT›¥ ÚS¼¿ NyPUÁ\ ÚUXÛY ÙLց|Y£• ˜zÛY ‡£•T ÙT¿• ˆŸUÖ]†ÛR ˜R¥-AÛUoNŸ Ù^VX¦RÖ ÙLց| Y‹RÖŸ. CRÁ —‰ T¥ÚY¿  
சமத்துவ மக்கள் கட்சி NyPNÛT E¿‘]Ÿ  BŸ.NW†hUÖŸ L£†‰ ÙR¡«†‰ ÚTpVRÖY‰:-

UÁ]Ÿ Byp LÖX†‡¥ BÚXÖNÛ] YZjhYR¼LÖL ÙLց|YWTyP‰ RÖÁ ÚUXÛY. RÖjL· —|• Bypeh YWUÖyÚPÖ• GÁ¿ ÙR¡‹‰«yPRÖ¥ TR«›¥ ÙRÖPŸ‹‰ C£eL ÚY|• GÁ\ BÛN›¥ RÖÁ ÚUXÛY ÙLց|YW ŒÛ]†RÖŸL·. A‰ ˜zVÖU¥ ÚTÖš«yP‰. CÚTÖ‰ jL· ÙT£•TÖÁÛUPÁ Byp AÛU†‰·¹ŸL·. EjLºeh BÚXÖNÛ] i\ J£ AÛY ÚRÛY›¥ÛX. G]ÚY ÚUXÛY ÚRÛY›¥ÛX GÁ\ ˜zÛY YWÚY¼fÚ\Á.

Sunday, June 5, 2011

சரத்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்:

தென்காசி,ஜூன் 5
தென்காசி அருகே ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது கார் மோதியதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இருவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இருவர் பலத்த காயம் அடைந்தனர்.  

தென்காசி பாறையடி தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மகன் சுந்தர் (19), மாடசாமி மகன் ராஜாமணி (26), பிச்சையா மகன் செந்தில்குமார் (25), மூக்கையா மகன் கதிரேசன் (27), ராமகிருஷ்ணன் மகன் கார்த்திக் (25), சுப்பிரமணி மகன் சண்முகதாஸ் (27), மற்றொரு பிச்சையா மகன் இசக்கிதாஸ் (23), சுப்பையா மகன் ஐயப்பன்(22). இவர்களில் கார்த்திக் ஆட்டோ வைத்துள்ளார். மற்றவர்கள் கட்டடத் தொழிலாளர்கள். ஞாயிற்றுக்கிழமை மாலையில் அனைவரும் கார்த்திக்கின் ஆட்டோவில் பழையகுற்றாலம் அருவிக்கு சென்று குளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.  

அப்போது, கடையநல்லூரிலிருந்து விக்கிரமசிங்கபுரம் சென்ற கார் தென்காசி-அம்பாசமுத்திரம் சாலையில் வழிமறிச்சான் பகுதியில் வந்து கொண்டிருந்தது.  எதிரே கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர்.  எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது கார் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுந்தர், ராஜாமணி, செந்தில்குமார், கதிரேசன், கார்த்திக், சண்முகதாஸ் ஆகியோர் இறந்தனர்.  பலத்த காயமடைந்த இசக்கிதாஸ், ஐயப்பன் ஆகியோர் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  இவர்களில் ஐயப்பன் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  விபத்தில் பலியான செந்தில்குமார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தென்காசி நகர துணைச் செயலராகவும், கார்த்திக் அக்கட்சியின் நகரப் பொருளாளராகவும் இருந்து வந்தனர்.  குற்றாலம் போலீஸôர் சம்பவ இடத்துக்குச் சென்று சடலங்களை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதரி நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார்.  
சரத்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்: விபத்தில் 6 பேர் இறந்ததற்கு ஆர்.சரத்குமார் எம்எல்ஏ இரங்கல் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு

நாகர்கோவில், ஜூன் 5:  
ஆரல்வாய்மொழி பொய்கை அணையில் மணல் எடுக்கப்படுவதால் அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமத்துவ மக்கள் கட்சி சார்பில் முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.  இது தொடர்பாக அக்கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. தியோடர் சேம் அனுப்பியுள்ள மனு:  

ஆரல்வாய்மொழியிலுள்ள பொய்கை அணைப்பகுதியிலிருந்து சுனாமி குடியிருப்புகள் கட்டுவதற்கு மணல் எடுக்கப்பட்டு வருகிறது. பல லட்சம் மதிப்புள்ள இந்த மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் துணையுடன் நூற்றுக்கணக்கான லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.  கன்னியாகுமரி முதல் தூத்தூர் வரையிலான சுனாமி குடியிருப்புகளுக்காக ரூ. 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இக் குடியிருப்புகளைக் கட்டும் பணி 12 அரசு ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்புகள் கட்டுவதற்கான மணல் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து எடுத்துவர ஒப்பந்தப்புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை முடிக்க இன்னும் 15 மாதகாலம் அவகாசமும் உள்ளது.  இந்நிலையில், அரசு அதிகாரிகள் அனுமதியுடன் பொய்கை அணைப்பகுதியில் மணல் அள்ளப்பட்டு வருகிறது.  மாவட்டத்தில் தோவாளை கால்வாய் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளும் மணல் தட்டுப்பாட்டால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக அணைக்குள்ளிலிருந்து மணல் அள்ள அனுமதி அளித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இதைத் தடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, June 3, 2011

தமிழக வளர்ச்சிப் பாதைக்கான அனைத்து அம்சங்களும் ஆளுநர் உரையில் உள்ளது: சரத்குமார்

ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவி ஏற்ற பிறகு, புதிய அரசின் முதலாவது சட்டசபை கூட்டம் 03.06.2011 அன்று கூடியது. காலை 10 மணிக்கு தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா சட்டசபையில் உரையாற்றினார்.

ஆளுநர் உரைக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து அம்சங்களும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

Thursday, June 2, 2011

முதல்வரின் செயல்பாடுகளால் சிறப்பான ஆட்சி: சரத்குமார்

தென்காசி, ஜூன் 1:  
தமிழக முதல்வரின் செயல்பாடுகள் அவர் சிறந்த ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. கூறினார். 

தென்காசியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை புதன்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் நல்லாட்சியமைத்து, அதில் நாங்களும் செயல்பட வாய்ப்பளித்த தமிழக முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஊழல் ஆட்சியை அகற்றியதன் மூலம், தமிழக மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர். தமிழக முதல்வரின் செயல்பாடுகள் மிகச் சிறந்த ஆட்சியைத் தருவார் என்ற நம்பிக்கையை பொதுமக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆட்சி நடைபெறுவதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். 

தென்காசி பகுதியில் குடிநீர் பிரச்னை, சாலை வசதிகள், மருத்துவமனையில் வசதியின்மை போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மூலம் தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். தொகுதியில் சிறு குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்வேன்.

குற்றாலத்தை மையமாகக் கொண்டு அதைச் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர். பேட்டியின் போது, சமக கொள்கைப் பரப்புச் செயலர் ஆர்.ஜெயப்பிரகாஷ், மாநில அமைப்புச் செயலர் ஆர்.காளிதாசன், தென்மண்டல அமைப்புச் செயலர் என். சுந்தர், கலை இலக்கிய அணிச் செயலர் என்.எம்.எஸ்.விவேகானந்தன், மேற்கு மாவட்டச் செயலர் தங்கராஜ் உள்பட பலர் இருந்தனர்.

Wednesday, June 1, 2011

குற்றால அருவி பகுதிகளில் சரத்குமார் MLA ஆய்வு

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் விழத் தொடங்கியதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் வருகையும் காலை முதலே அதிகரிக்கத் தொடங்கியது. குற்றாலத்தில் தாற்காலிகக் கடைகள் அமைக்கும் பணிகளும் தீவிரமாகியுள்ளது.

அருவிக்கரை பகுதிகளை தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.சரத்குமார் நேரில் சென்று பார்வையிட்டார்.

சுற்றுலாப் பயணிகளுக்கான அத்தியாவசியத் தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
            

குற்றாலத்தில் தீம் பார்க் உருவாக்கப்படும்

முதல்வர் ஜெயலலிதாவின் எளிமையைப் பலரும் பாராட்டுகின்றனர்" என்று சமீபத்திய தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தென்காசியில் அளித்த பேட்டி பின்வருமாறு:
"தமிழக மக்கள் மாற்றம் விரும்பி வாக்களித்துள்ளனர். நல்ல ஆட்சி அமைந்துள்ளது என்று நிம்மதியடைந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா தனது சுற்றுப்பயணம் மற்றும்  போக்குவரத்தின்போது பொதுமக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளார். இலவச அரிசி திட்டத்தைக் கூட எளிமையாக நடத்துகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவின் எளிமைக்குப் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர். தென்காசி தொகுதியில் குடிநீர், சாலை, மின்விளக்கு பிரச்னைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பிரச்னைகள் மற்றும் அரசு மருத்துவமனை மேம்பாடு போன்றவற்றில் போர்க்கால நடவடிக்கை எடுக்க அமைச்சர்களை வலியுறுத்துவேன்.
உழைப்பவரே உயர்ந்தவர் என்ற கொள்கை உடையவன் நான். உழைப்பின் மீது அதிக நம்பிக்கை உள்ளவன். அது வீண்போகாது. தமிழ்நாட்டில் நடிகராக பல்வேறு கட்டங்களைத் தாண்டிவந்த நான் சிறந்த எம்எல்ஏவாக செயல்படுவேன். குற்றாலத்தில் தீம் பார்க் உருவாக்கப்படும்.  தென்காசி தொகுதிக்கு என்னென்ன தேவைகள் என்பது குறித்து மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்.  மின்வெட்டு, மணல் பிரச்னை, கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றில் முதல்வர் நல்ல முடிவெடுப்பார்."

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சமக நிர்வாகிகள் காளிதாசன், ஜெயப்பிரகாஷ், விவேகானந்தன், சண்முகசுந்தரம், மாடசாமி, முத்துக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர்.

சரத்குமார் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு

தென்காசி,மே.31- 
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சரத்குமார் எம்.எல்.ஏ. அதிரடி ஆய்வு மேற்கொண்டார். தென்காசி தொகுதி எம்.எல்.ஏ.வும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான ஆர்.சரத்குமார் கடந்த 2 நாட்களாக தென்காசி தொகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். 

இன்று காலை அவர் தென்காசியில் 32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். காண்டிராக்டர்களை நேரில் அழைத்து பணிகளை துரிதமாக முடிக்க அறிவுரை வழங்கினார். தொடர்ந்து சர்வீஸ் ரோடு அமைக்க ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார். ரெயில்வே நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட வேண்டிய பாலத்திற்கான பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சர்வீஸ் ரோடு அமைப்படாததால் போக்குவரத்துக்கு ஏற்படும் சிரமங்களை எடுத்துக்கூறினர். 

தொடர்ந்து சரத்குமார் எம்.எல்.ஏ. தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஒவ்வொரு வார்டாக சுற்றி நோயாளிகளை நேரில் சந்தித்து மருத்துவமனையில் உள்ள நிறை, குறைகளை கேட்டறிந்தார். மருத்துவர்களை அழைத்து சிகிச்சை முறைகள் கேட்டறிந்தார். அப்போது சிலர் மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறை உள்ளதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சரத்குமார் எம்.எல்.ஏ. உறுதியளித்தார். 

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தென்காசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் வசதி உள்ளிட்ட அதிநவீன கருவிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மருத்துவமனையில் சுத்தமாக வைத்திருக்க நோயாளிகளும் ஒத்துழைக்க வேண்டும். மருத்துவர், செவிலியர், துப்புரவு பணியாளர் பற்றாக்குறை போக்கப்படும். அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு மருத்துவமனையில் இன்னும் தரம் உயர்த்தப்படும். ரெயில்வே மேம்பால பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும். சர்வீஸ் ரோடு 2 மாதத்தில் போடப்படும். தென்காசி தொகுதியில் கூட்டணி கட்சியினரையும் அழைத்து பேசி வளர்ச்சிக்காக பணிகளை நிறைவேற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது மாவட்ட செயலாளர் தங்கராஜ், கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், தென்காசி நகர சமக செயலாளர் வில்சன், பாவ+ர்சத்திரம் நகர செயலாளர் காந்திராஜ், அதிமுக நகர செயலாளர் முத்துகுமார், வக்கீல் பிரிவு செயலாளர் மாடசாமிபாண்டியன், பொருளாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மாதத்தில் 20 நாட்கள் தொகு தியில் செலவழிப்பேன்

போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்று தெம்பாக இருக்கிறார் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார். எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற அவரை சந்தித்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அமைதியாக பதில் அளித்தார்.

பண பலம், படைபலம் ஆகியவற்றை மீறி இரண்டு தொகுதிகளில் எப்படி வெற்றி பெற்றீர்கள்?

‘‘ 1977-ம் ஆண்டில் இருந்து கருப்பசாமிபாண்டியன் அரசியலில் இருக்கிறார். அதிலும் ஆளும் கட்சி வேட்பாளர் என்றால் சொல்லவே வேண்டாம். அ.தி.மு.க.வின் கூ ட்டணி பலம், நாங்கள் வகுத்த வியூகங்கள், ‘கரப்ட்’ ஆகிப்போன தி.மு.க. ஆட்சியை மாற்றியே ஆகவேண்டும் என்கிற உணர்வு, கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் க டுமையான உழைப்பு தென்காசியிலும், நாங்குனேரியிலும் வெற்றி பெறச் செய்திருக்கிறது.’’

தி.மு.க. கூட்டணியின் மிக மோசமான தோல்விக்கு உண்மையான காரணம் என்று எதைக் கூறுகிறீர்கள் ?

‘‘மாநிலத்திலும் மத்தியிலும் கலைஞரின் குடும்பத்தினர்தான் எல்லாப் பதவிகளையும் பங்கு போட்டுக் கொண்டனர் என்பது ஊரறிந்த உண்மை. அந்தப் பதவிகளை வைத்துக் கொண்டு ஊழல்களை வளர்த்தார்கள். கோடிகளில் விளையாடியதால் அவர்களுக்குள்ளேயே பூசல். அளவுக்கு மீறிய லஞ்ச ஊழலும், ஆட்டமும், சர்வாதிகாரப் போக்கும், தாங்க முடியாத அளவுக்குப் போனதால், ஒரு மௌனப் புரட்சி நடத்தி தி.மு.க.வை தோற்கடித்திருக்கிறார்கள் மக்கள்.’’

‘என் மகன், பேரப்பிள்ளைகள் சினிமாவுக்கு வரக் கூடாதா’ என்று சில உதாரணத்துடன் கருணாநிதி கேள்வி எழுப்பியிருந்தார். நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் அதற்கு உங்கள் பதில் என்ன?

‘‘ மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேஷ்முக்கின் மகன் விதேஷ் தேஷ்முக் நடிகர்தான். அங்கு சினிமா தொழில் பாதித்ததா? ராஜ்கபூர், ரிஷிகபூர், சசிகபூர், சம்மிகபூர், கரினாகபூர் வரை கபூர் குடும்பம் சினிமாவில் இருக்கிறது. அங்கு சினிமா பாதித்ததா?

பிரபு, தனுஷ், ரஜினி, ஏவிஎம். சரவணன் என கலைஞர் சொல்கிற கலை உலகத்தினர் ‘சிஎம்’ வீட்டுப் பிள்ளைகளாக இருந்து ஆதிக்கம் செலுத்தியவர்கள் அல்ல. பதிமூ ன்று வருஷம் கலைஞர் பதவியில் இல்லாமல் இருந்தபோது இந்தப் பிள்ளைகளும் பேரன்களும் சினிமா படங்கள் எடுத்தார்களா? ஏன் எடுக்கவில்லை? அப்போது பணம் இல்லாமல் போனதா?’’

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் படுதோல்வி அடைவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?’

‘‘கொள்கை அடிப்படையில் இல்லாமல் எத்தனை இடங்கள் பெறலாம் என்று கணக்குப் போட்டு நின்று தோற்றார்கள். கலை உலக சகோதரர்களை திட்டுவதையே கொள்கையாகக் கொண்ட ராமதாஸ் இந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக் கொண்டால் நல்லது.’’

ஈழத்தமிழர்கள் பிரச்னையும் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணம் என சொல்லலாமா?

‘‘நிச்சயமாகச் சொல்லலாம். நமது சொந்தங்கள் படுகொலை செய்யப்பட்ட காலத்தில் கலைஞர் ஆடம்பர உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியது மறக்கக்கூடியதா? படு கொலையைத் தடுத்து நிறுத்த முற்படாமல் பாசாங்கு காட்டிய அவரை எப்படி மறக்க முடியும்? ‘ஈழத்தமிழருக்கு துரோகம் செய்த காங்கிரஸையும், துணை போன தி.மு.க.வையும் தோற்கடிப்பேன்’ என சூளுரைத்த சகோதரர் சீமானின் கடுமையான முயற்சியும் அந்தக் கூட்டணி வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.’’

விஜயகாந்தை சந்தித்துப் பேசியிருக்கிறீர்களே, கலை உலகம் சம்பந்தமான பிரச்னைகள் பேசப்பட்டதா?

‘‘அவர் கூட்டணிக் கட்சிகளில் இருக்கிற ஒரு கட்சியின் தலைவர். நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர். இதன் அடிப்படையில் அவரைச் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எந்தவித அரசியல் சாயமும் பூசாமல் அவர்களின் பிரச்னைகளை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும்.’’

ஊழல் செய்தவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள களத்தில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறதே?

‘‘ஊழல் செய்தவர்கள், ஊரை அடித்து உலையில் போட்டவர்கள், அடியாட்களை வைத்து நில அபகரிப்புச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை தண்டித்தே ஆகவேண்டும். தமிழகத்தில் தோண்டத் தோண்ட ஊழல்கள் பூதாகரமாக வந்து கொண்டே இருக்கும். உலகத்திலேயே இரண்டாவது மிகப் பெரிய ஊழலைச் செய்தவர் முன்னாள் மத்திய மந்திரி ராஜா என்று, உலக அளவில் தமிழகத்தின் பெயர் கெட்டுப் போய் இருக்கிறது. இவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளின் வழியாக தப்பித்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.’’

சமத்துவ மக்கள் கட்சியின் எதிர்காலத் திட்டங்கள் என்ன?


‘‘கட்சியின் அடித்தளம் வலுப்படுத்தப்படும். கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டப்படும். தமிழக மக்களுக்கும் குறிப்பாக, தென்காசி, நாங்குனேரி தொகுதி மக்களுக்காகவும் எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.



மக்களுக்காக எங்களை அர்ப்பணித்திருக்கிறோம். சட்டசபைப் பணிகள் இல்லாத காலத்தில் நான் தொகுதியில்தான் இருப்பேன். எப்படியும் மாதத்தில் 20 நாட்கள் தொகு தியில் செலவழிப்பேன். கலை உலகப் பணியும் தொடரும்.’’

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறாரே?

‘‘திரையுலக மூத்த சகோதரர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று எங்கள் இயக்கத்தின் சார்பிலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பிலும் பிரார்த்திக்கிறோம். அவர் பழைய பொலிவுடன் மீண்டும் நிச்சயம் திரும்பி வருவார்’’ என்று முடித்துக் கொண்டார்.

- குமுதம் ரிப்போட்டர்