Wednesday, August 15, 2012

சுதந்திர தினம்: தலைவர் சரத்குமார் வாழ்த்து

சென்னை, ஆக.- 15 - நாடெங்கும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள செய்தி வருமாறு:- நாம் 66-வது சுதந்திர தின விழாவை கொண்டாடி மகிழ்வோம். நாம் ஏற்க வேண்டிய சபதங்கள் எத்தனையோ இருப்பினும் நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைப் போற்றி பேணிக்காப்பதில் நாம் மேலும் உறுதியான நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும். நம் நாட்டின் உயர்ந்த பாரம்பரிய பண்புகள் பழக்க வழக்கங்களைவிட மேற்கத்திய கலாச்சாரங்கள் உயர்ந்தவை அல்ல. அவற்றிலிருந்து தேவையானதை எடுத்துக் கொள்ள வேண்டும், அவற்றிற்கு  நாம் அடிமையாகிவிடக்கூடாது. ஜனநாயகப்  பண்புகளைப் போற்ற வேண்டும். தனி மனித ஒழுக்கங்களை எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டும். இந்தியா 100 சதவிகிதம் கல்வி வளர்ச்சி பெற்ற நாடாக அறிவிக்கும் பொருட்டு அனைவரும் பாடுபட வேண்டும், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், மகாத்மாகாந்தி, நேருஜி, வல்லபபாய் பட்டேல், திலகர், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய பாரதியார், பெருந்தலைவர் காமராஜர் போன்ற சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட எண்ணற்ற தலைவர்களின் உழைப்பையும், அவர்கள் இந்த தேசத்திற்காக பாடுபட்டதையும் நம் இளைஞர்களுக்கும், சந்ததியினர்களுக்கும் விளக்க வேண்டும். அவர்கள் வழி நடக்க வேண்டும். சமத்துவம் வளர, சமதர்மம் நிலைத்திட இந்நன்னாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

தீரன் சின்னமலை நினைவிடத்தில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி

சென்னை, ஆக.- 5 - தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு அருகில் ஓடாநிலை என்ற கிராமத்தில் உள்ள தீரன் சின்னமலை நினைவிடத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அஞ்சலி செலுத்தினார்.
பெருந்துறையில் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் ஊர்வலமாகச் சென்று தீரன் சின்னமலை நினைவிடம் உள்ள ஓடாநிலை கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்று அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்தியபின் அங்கு நடந்த அரசு விழாவிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்.எல்.ஏ.,  பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஆர்.ஜெயப்ரகாஷ், துணைப் பொதுச் செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம் ஆகியோருடன் தணியரசு எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர்கள் ஈரோடு தெற்கு கம்பளியாம்பட்டி- செல்வராஜ், ஈரோடு வடக்கு-லாலா கணேசன், ஈரோடு மாநகர்- சின்னச்சாமி, சிவகுமார், நாமக்கல்- சுரேஷ்காந்தி, திருப்பூர் மாநகரம் - ரத்னா ஜெ.மனோகரன், திருப்பூர் தெற்கு - தளி சிவகுமார், திருப்பூர் வடக்கு - அவினாசி முருகேசன், சேலம் மாநகர்- ஜெ.கே.முருகேசன், சேலம் மேற்கு - மைக்கேல் தங்கராஜ், சேலம் கிழக்கு - ஜவஹர், கோவை மாநகர்- ஏ.கணேசன், கோவை வடக்கு - பி நேருஜி, கோவை தெற்கு - எஸ்.ஜெய்சங்கர், கரூர் - பி.மனோகரன், ஐ.கே.டி, தங்கவேல், திருச்சி மாநகர் - ஏ.பி.மஹேஷ்வரா, திருச்சி புறநகர் டி.முரளிகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Thursday, August 9, 2012

குற்றால சாரல் திருவிழாவில் சமத்துவ கட்சி தலைவர் உறுதி

தென்காசியில் ரிங் ரோடு விரைவில் அமைக்கப்படும் என்று குற்றால சாரல் திருவிழாவில் சமத்துவ கட்சி தலைவர் உறுதி கூறி உள்ளார் ..

குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் எதிர்பார்த்த சாரல் திருவிழா நேற்று துவங்கியது.குற்றாலத்தில் சாரல் திருவிழா நேற்று துவங்கியது. குற்றாலம் கலைவாணர் அரங்கில் நடந்த துவக்கவிழா நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராஜகிருபாகரன் வரவேற்புரையாற்றினார். தமிழக கதர் மற்றும் கிராம தொழில்துறை அமைச்சர் செந்தூர்பாண்டியன் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.

விழாவில் சரத்குமார் பேசுகையில், குடும்பத்துடன் பொழுது போக்குவதற்கும், சுற்றுலா செல்வதற்கும் குற்றாலம் ஏற்ற வகையில் உள்ளது. தென்காசியில் ரிங் ரோடு விரைவில் அமைக்கப்படும். அருவிக்கரை பகுதியை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குற்றாலத்தில் சுற்றுலா தரத்தை உயர்த்தும் வகையில் ஐந்தருவியில் 6 கோடி ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்படுகிறது என்றார்.
நேற்று மாலை துவங்கிய திருவிழா நாளையுடன் முடிகிறது என்பது குறி்ப்பிடத்தக்கது.

Thursday, July 26, 2012

23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க- ஆர்.சரத்குமார் கோரிக்கை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி தென்காசி.எம்.எல்.ஏ. சரத்குமார் கூறியிருப்பதாவது:- மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுவிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள இலங்கை மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட துவங்கி விட்டனர். எனவே நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, தூதுவரை அனுப்புவது, என்று பிரச்சினைகளை தள்ளிப்போடுவதே மத்திய அரசின் செயலாக இருந்து வருகிறது.
...
தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசும், பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.

நாட்டுபடகு கடலுக்கு செல்லும் நாட்களில் இயந்திர படகு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அது போன்று இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடும். எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்திடும் வாய்ப்பை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க உடனடியாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 5 மீனவர்களையும் பிடித்து அவர்கல் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி தென்காசி.எம்.எல்.ஏ. சரத்குமார் கூறியிருப்பதாவது:- மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 23 பேர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்களை விடுவிக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கையில் போர் முடிந்த பிறகு அங்குள்ள இலங்கை மீனவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபட துவங்கி விட்டனர். எனவே நமது மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்ட வேண்டியது இந்திய அரசின் கடமையாகும். அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, தூதுவரை அனுப்புவது, என்று பிரச்சினைகளை தள்ளிப்போடுவதே மத்திய அரசின் செயலாக இருந்து வருகிறது.
...
தமிழர்களை வஞ்சித்து வரும் இலங்கை அரசும், இலங்கைக்கு துணை போகும் மத்திய அரசும், பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது.

நாட்டுபடகு கடலுக்கு செல்லும் நாட்களில் இயந்திர படகு மீன்பிடிக்க செல்லக்கூடாது. அது போன்று இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி மீன்பிடிப்பதில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி கொண்டால் இது போன்ற பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டு விடும். எனவே இருநாட்டு மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்திடும் வாய்ப்பை இந்திய இலங்கை அரசுகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும் மேலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களையும் விடுவிக்க உடனடியாக மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள 5 மீனவர்களையும் பிடித்து அவர்கல் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளார்கள். அவர்களையும் விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

குற்றாலத்தில் சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை


குற்றாலம்: குற்றாலத்தில் தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமாரின் சொந்த செலவில் கட்டப்பட்டுள்ள காசு போட்டு பயன்படுத்தும் கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.

தென்காசி எம்.எல்.ஏ.வும், சமக தலைவருமான சரத்குமார் ரூ.7.50 லட்சம் செலவில் குற்றலாத்தில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக காசு போட்டு பயன்படுத்தும் கழிவறையை கட்டியுள்ளார்.

மெயினருவி அருகே சுமார் 45 சதுர அடியில் அமைக்கப்பட்டு்ள்ள இந்த கழிவறையை பராமரிக்க மனிதர்கள் தேவையில்லை.
...
இரண்டு ரூபாய் அல்லது இரண்டு 1 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் தானாகவே கதவு திறந்து கொள்ளும். பின்னர் உள்ளே உள்ள கதவை திறந்து கொள்ளலாம்.

கழிவானது சுமார் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பைபர் டேங்கில் சேகரிக்கப்படுகிறது. அதில் உள்ள பாக்டீரியா தொழில் நுட்பமானது கழிவுகளை சுத்தப்படுத்தி மற்றொரு டேங்கிற்கு வெறும் தண்ணீராக மட்டும் செல்கிறது.

இந்த தண்ணீரை மீண்டும் உபயோகப்படுத்தும் அளவுக்கு மறு சுழற்சி செய்யலாம்.
தற்போது குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிவறையில் இந்த மறுசுழற்சி முறை மட்டும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. கழிவறையில் தண்ணீர், மின்விசிறி வசதி ஆகியவை உள்ளன. கழிவறையை உபயோகப்படுத்துபவர்கள் சுத்தப்படுத்த மறந்தாலும் தானாகவே சுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் சென்சர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கழிவறை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறக்கப்பட உள்ளது.

Monday, July 16, 2012

பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுன் கூட்டணி தொடரும்

சேலம் ஜூலை.- 17 - வரும் பாராளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என சேலத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 110 வது பிறந்த நாள் விழா, அகில இந்திய சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமாரின் 58 வது பிறந்த நாள் விழா,கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை நடைப்பெற்றது. விழாவிற்கு சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.கே.என்.முருகேசன் தலைமை வகித்தா.மாஇல துணை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் வாழப்பாடி ஜவஹர்,மேற்கு மாவட்ட செயலாளர் மைக்கேல் தங்கராஜ், நாமக்கல் மாவட்ட செயலாளர் சுரேஷ் காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரியும்,கட்சியின் அவைத்தலைவருமான செல்வராஜ், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்,மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் எம்.எல்.ஏ. ஆகியோர் விழா பேரூரையாற்றினர். விழாவில் அகில இந்திய சமத்துவ கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு 50 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் மாவட்ட அளவில் அரசுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது.அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 5 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது.6 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. படிக்காத மேதையாக இஉரந்த காமராஜர் நாட்டை ஆண்டுள்ளார். அவரது பிறந்தநாளை தமிழக அரசு கல்வி எழுச்சி நாளாக கொண்டாடி வருகிறது.ஞாயிற்றுக் கிழமை பள்ளி விடுமுறையாக இருந்தும் மாணவ,மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. காமராஜர் 1954 ஆம் ஆண்டு முதல் 1963 ஆம் ஆண்டு வரை காமராஜர் தமிழகத்தின்  முதல் அமைச்சராக இருந்து சிறப்பான ஆடசி செய்தார்.கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். குழந்தைகள் பசியாறி படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவு திட்டம் தந்தவர். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் அவரது ஆட்சியில் 19 தொழிற்பேட்டைகளை கொண்டு வந்தார். 2 முஐ பிரதமர் பதவி தேடி வந்தும் அதை உதறி தள்ளியவர். இன்று சமத்துவ தலைவராக அவர் விளங்கி வருகிறார்.காமராஜர் விட்டு சென்ற பணிகளை நாம் தொடர்ந்திட வேண்டும். முதல்வர் ஆனபோது அவருக்கு சரித்திரம் தெரியுமா?பூகோளம் தெரியுமா? என்று தி.மு.க.வினர் கேலி செய்தனர். அவர்களுக்கு காமராஜர் அளித்த பதில் என்ன? தெரியுமா? நாட்டில் உள்ள கிராமங்களை தெரியும். நதிகள் எத்தனை இருக்கிறது என்பது தெரியும்.நகரங்கள், தொழில்கள் இருப்பது தெரியும். இது போன்ற சரித்திரமும்,பூகோளமும்தான் தனக்கு தெரியும் என்றார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அரசியல் மாற்றத்திற்காக இங்கு முப்பெரும் விழா நடக்கவில்லை.நல்லவரோடு வல்லவரோடு திறமையான, உறுதியானவரோடு இருக்கிறோம். எங்கள் கூட்டணி பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும். இளைஞர்களும், படித்தவர்களும் அரசியலுக்கு வரவேண்டும்.நான் முதல்வராகும் எண்ணம் இல்லை. உங்களில் ஒருவராக இருக்க விரும்புகிறேன்.
சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க.கூட்டணியில் 41 தொகுதியில் நின்று 29 தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் என்னால்தான் அ.தி.மு.க.ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். எது உண்மை என்று மக்களுக்கு தெரியும். ஆனால் இப்போது சட்டமன்றத்தில் ஆளையே காணும். தான் சொன்னதையே மறந்துவிடக் கூடியவர் தற்போது சட்டமன்றத்திற்கு வருவதில்லை.கேட்டால் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்கிறார்.வழக்கு முடிய 5 ஆண்டுகள் ஆகும்.அதுவரை அவர் சட்டமன்றத்திற்கு வரமாட்டாரா? தே.மு.தி.க.வெற்றி பெற்ற தொகுதியில் மட்டும் அவர் மக்களை சந்தித்து வருகிறார். அதே போல நானும் வருகின்ற செப்டம்பர் மாதம் தே.மு.தி.க.வெற்றி பெற்ற 29 தொகுதிகளிலும் மக்களை சந்திக்க இருக்கிறேன். அதே போல் தி.மு.க.தலைவர் சிறை நிரம்பும் போராட்டம் நடத்தினார். எதற்காக நடத்தினால் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காகவா? பெட்ரோல் விலை உயர்வுக்காகவா? முல்லை பெரியார்,காவிரி பிரச்சனைக்காகவா? கடந்த ஆட்சி காலத்தில் தவறு செய்த தி.மு.க.முன்னாள் அமைச்சர்களை  அ.தி.மு.க.அரசு கைது செய்தவதை கண்டித்து சிறை நிரம்பும் போராட்டம் நடத்துகிறார். நம்மால் முடியும், என்னால் முடியும்,என்ற தத்துவத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். நான் தமிழக முதல்வரை சந்தித்து எம்.பி.பி.எஸ்.,என்ஜீனியரிங் கல்லூரி வரை இலவச கல்வி கொடுங்கள் என எடுத்து சொல்வேன். அப்படி செய்துவிட்டால் மக்களை உங்களை எப்போது மறக்க மாட்டார்கள் என்பேன். மக்களுக்கு என்றும் உழைக்கும் கட்சியாக வருங்காலத்தில் நாமும் ஆட்சி பீடத்தில் இருக்கும் நிலையை நீங்கள் உருவாக்கிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்த விழாவில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.1 கோடிக்கு மேல் வழங்கப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.என்.சுந்தரேசன்,கொள்கை பரப்புச் செயலாளர் மணிமாறன், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பன்னீர் செல்வம், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், இளைஞர் அணி துணை செயலாளர் அந்தோணிராஜ்,ஐஸ் ஹவுஸ் தியாகு,நடிகர் கராத்தே ராஜா, தென்மண்டல செயலாளர் என்.சுந்தர், சேலம் மாநகர் மாவட்ட பொருளாளர் பவர் விஜய்,ஆத்தூர் மண்டல செயலாளர் நடராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த்தை விட மாட்டேன், தேமுதிக ஜெயித்த தொகுதிக்கெல்லாம் போவேன்: சரத்குமார்

மேடையில் பேசும்போதே தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாதவர் விஜயகாந்த். அவரை நான் விட மாட்டேன், அவரது கட்சி ஜெயித்த ஒவ்வொரு தொகுதிக்கும் போய் அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று கூறியுள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.

சேலத்தில் காமராஜர் பிறந்த நாள், சரத்குமார் பிறந்த நாள், கட்சி நிதியளிப்பு நாள் என முப்பெரும் விழாவைக் கொண்டாடியது சரத்குமார் கட்சி.

நிகழ்ச்சியில் சரத்குமார் பேசுகையில், நம்மை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் முதல்வர் அம்மா. நாம நல்லவரோடு இருக்கோம், வல்லவரோடு இருக்கோம். நான் இப்பவே அமைச்சராக தான் இருக்கிறேன். அம்மா அப்படிதான் என்னை நல்ல இடத்தில் வைத்திருக்கிறார் அவருக்கு ஒரே ஒரு கோரிக்கை இன்று கல்வி வணிகமாகிவிட்டது எனவே கல்வியை இலவசமாக தர முயற்சிக்கவும்.

ஒரு மைலுக்கு ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என விரும்பியவர் காமராஜர். கல்வி ஒளியேற்றியவர் அவர். அவரின் வழியில் கல்வி ஒளி ஏற்ற கூடியவர்கள் நாம். உங்களில் ஒருவர் முதல்வர் ஆகணும் என்பதற்காக தான் இந்த முப்பெரும் விழாவே.

சிறை நிரப்பும் போராட்டம் செய்தவர்கள் முல்லை பெரியார் போன்ற மக்கள் பிரச்சனைக்காக ஏன் செய்யவில்லை? இப்போ சொல்றாரு ஈழத்தை மீட்டு தருவேன்னு அத ஏன் இங்க இருந்து சொல்றிங்க அங்க போயி (இலங்கை) கேட்க வேண்டியது தானே!.

41 பெற்று அதில் 29ஐ வென்றவர் ஒருவர். என்னால் தான் ஆட்சி அமைந்ததுனு சொல்லிக்கிட்டு இருந்தாரு, இப்போ ஆளையே காணோம். மேடையில பேசும் போதே என்ன பேசினோம்னு மறந்துடுராரு. அவர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, கேட்டால் வழக்கு என்கிறார். வழக்கு ஐந்து வருடம் நீடித்தால் ஐந்து வருடமும் வரமாட்டாரா? அப்படி என்றால் அவர் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்த மக்களின் கதி?

அவரை விடமாட்டேன், அவரின் 29 தொகுதிகளுக்கும் இனி ஒவ்வொன்றாக போக போகிறேன் மக்கள் பணி ஆற்றுவேன்.

நான் என் தாய்க்கு பிறந்தேன். கருவில் இருக்கும் வரை நான் கருவே. நாடார் அல்ல. எனவே நமது காமராஜரையும் நாடார் என சுருக்க வேண்டாம் அவர் பாரத தலைவர் இந்த கொள்கையோடு மக்கள் பணி செய்வோம் நமக்கு பதவி முக்கியமில்லை சேவையே முக்கியம் என்று பேசினார் சரத்குமார்.

Sunday, July 15, 2012

ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு ஆதரவு: சரத்குமார்

சென்னை, ஜூலை.15 - ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிக்க முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்கு கட்டுப்பட்டு சங்மாவை ஆதிரிப்போம் என்று சமத்துவ மக்கள் கட்சியின்  தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார். ​படித்த இளைஞர்கள் அதிகம் பேர் அரசியலுக்கு வரவேண்டும், ஈடுபாடு உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் சரத்குமார் தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக கூறினார்.
பிரபல நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார். இவர் தனது பிறந்தநாளை நேற்று காலை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில்  மனைவி ராதிகா சரத்குமார்  மற்றும் மகனுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.  இதுவரை படத்தயாரிப்பாளர் சீனிவாசன், அம்மா கிரியேஷன்சிவா, ஞானவேல் ராஜா, கே.ராஜன் மற்றும் எர்ணாவூர் நாராயணன், (ச.ம.க.து.தலைவர்) ஜே.எம்.ஆரூண் (எம்.பி) கட்சி தொண்டர்கள். சினிமா ரசிகர்கள் என பலரும் திரளாக கூடி நேரில் வாழ்த்தினார்கள். பின்னர் பிறந்தநாள் வாழ்த்து செய்தியாக சரத்குமார் கூறியதாவது:-
இன்றைய கால கூட்டத்தில் அனைத்தும் மாறிக்கொண்டே வருகிறது. பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதை வரவேற்க வேண்டும். அதே நேரத்தில் ஏழை பணக்காரன், ஏற்ற தாழ்வுகள், கீழ் சாதி, மேல் சாதி, மத வேற்றுமைகள் இன்னும் மாறவில்லை. இது மாற வேண்டும். இதற்காக பாடுபடுவேன். கல்வியில் மாற்றம் வேண்டும். தமிழகத்தில் பல மாவட்டங்களில் கல்வி கற்பவரின் நிலை கீழ் நோக்கி இருக்கிறது. குறிப்பாக சேலம் பகுதியில் 80 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர். தென்காசி பகுதியில் 84 சதவீதம் பேர் கல்வி கற்றவர்களாக உள்ளனர்.  இப்படி குறைபாடு உள்ள பகுதிகளில் முழுமையான கல்வி கிடைக்க வேண்டும். இப்போது படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். காரணம் பொருளாதாரம் உயர்த்திருந்தாலும், விஞ்ஞானம் அபார வளர்ச்சி பெற்றுயிருந்தாலும் இதற்கு மூலக்காரணமாக இருப்பவர்கள் அரசியல்வாதிகள்.
மக்களுக்கு அரசு எவ்வளவோ நன்மைகள் செய்தாலும் முழுக்க முழுக்க அரசாங்கமே அனைத்தையும் செய்ய வேண்டும் என்று எண்ணக்கூடாது. மக்களும் விழிப்புணர்ச்சி பெற்று அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். என்னுடைய கருத்தில் இன்னொன்றை ஆழமாக பதிவு செய்ய விரும்புவது அனைவருக்கும் கல்வி இலவசமாக கிடைக்க  வேண்டும். சீட்வாங்கும் போது பெற்றோர்கள் படும் கஷ்டம் பரிதாபமாக இருக்கிறது.
இப்போது தமிழ் கலாச்சாரம், பண்பாடு அதிகம் மாறிவிட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை இப்போது இல்லை. பழக்க வழக்கம், நடை, உடை, பாவனைகள் மாறிவிட்டது. இதனால் பாதிப்பு ஏற்படும். என்கிற நிலை வரும் போது அதை அளவோடு வைத்துக் கொள்ள வேண்டும். வெளிநாட்டவர்கள் இப்போது அதிகம் பேர் தமிழ்நாட்டில் வசிக்கிறார்கள். இவர்கள் அவர்களுடைய பண்பாட்டுக்கு தகுந்த மாதிரிதான் இங்கே நடந்து கொள்வார்கள். அதனால் பிரச்சனை ஏற்படும் போது அதை ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம். இதனால் நம் நாட்டுக்கு சீரழிவு என்பது தவறு என்று நான் கருதுகிறேன். இங்கே  ஜனாதிபதி தேர்தலில் எங்கள் கட்சியின் நிலைபாட்டை கேட்கிறீர்கள்.
ஜனாதிபதி தேர்தலில் சங்மாவை ஆதரிப்பதென முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அவரது முடிவுக்குக் கட்டுப்பட்டு சங்மாவை ஆதரிப்போம்.
இவ்வாறு நடிகர் சரத்குமார்  தெரிவித்துள்ளார்.

Monday, June 18, 2012

தென்காசி அரசு மருத்துவமனையில் செடி அல்ல.. மரத்தையே நட்டு வைத்து பூங்கா

தென்காசி: தென்காசி எம்எல்ஏ சரத்குமார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க முயற்சி எடுத்து வருகிறார். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 லட்ச ரூபாய் செலவில் நடமாடும் டயாலிசிஸ் இயந்திரத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார். மேலும் படுக்கைகள், மின் விசிறி, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இதையடுத்து மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகள் சுகாதாரமாக இருக்கும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் 15 லட்ச ரூபாய் செலவில் பூங்கா ஒன்றும் அமைத்து வருகிறார்.

இந்த பூங்காவில் செடி வைத்து அது மரமாக வளரும் வகை காத்திருக்க முடியாது என்பதால் மரமாகவே கொண்டு வந்து நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடப்படுகிறது. இதே போன்று இ டாய்லட் எனப்படும் எலக்ட்ரானிக் கழிப்பறை வசதியையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த வசதிகள் அனைத்தையும் அரசிடம் கோரிக்கை வைத்து அதற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்காமல் தனது சொந்த செலவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, June 3, 2012

தேமுதிகவினருக்கு நாகரீகமோ,சட்டமோ தெரியாது : சரத்குமார்

ஜனநாயகத்தை தெரிந்துகொண்டு தேமுதிகவினர் அரசிலுக்கு வரவேண்டும் என்றார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான சரத்குமார்.

புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டை மானை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டபோது
பேசியது.
புதுக்கோட்டை தொகுதிக்குள்பட்ட கறம்பக்குடி ஒன்றியத்தில் சூரக்காடு கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்ட சரத்குமார், அடுத்ததாக புதுப்பட்டியில் பிரசாரம் மேற்கொள்ள அங்குள்ள கடைவீதியில் பிரசார வாகனத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தை தொடக்கினார். அப்போது, அவ்வழியாக பிரசாரம் மேற்கொள்ளவரவிருந்த தேமுதிக பிரேமலதாவை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் கொடியுடன் காத்திருந்தனர்.அப்போது, சரத்குமார் பேசத்தொடங்கியதும் தேமுதிக கொடியை உயர்த்திப்பிடித்தபடி விஜயகாந்த் வாழ்க என்று தொண்டர்கள் முழக்கமிட்டனர்.
அதைத்தொடர்ந்து பேசிய சரத்குமார்,
 ’தேமுதிகவினருக்கு நாகரீகமோ,சட்டமோ தெரியாது.  அதை தொண்டர்களுக்கு சொல்லிக்கொடுக்க கட்சியின் தலைமையும் சரியாக இல்லை.
யாருடைய சுதந்திரத்தையும் யாரும் பறிக்கமுடியாது. தேமுதிக 29 சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்றிருக் கிறார்கள் என்றால் அது அதிமுக போட்ட பி்ச்சை என்பதை உணரவேண்டும். பகுத்தறிவு, நேர்மை, நீதி, ஜனநாயகம் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு தேமுதிகவினர் அரசியலுக்கு வரவேண்டும்.
புதுக்கோட்டையில் 1.20 லட்சம் வாக்குள் வித்தியாசத்தில அதிமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், தேமுதிகவுக்கு ஏற்படபோகும் படுதோல்வியையும் யாராலும் தடுக்க முடியாது.
மக்களுக்கு எதிராக ஆட்சி செய்த திமுகவை வீழ்த்தி தொலை நோக்கு சிந்தனையுடன் மக்களுக்காக பணியாற்றும் அதிமுகவை மக்கள் ஆதரி்க்க வேண்டும்என்றார். அதைத்தொடர்ந்து வெட்டன்விடுதி, வானக்கண்காடு, கருக்காகுறிச்சி, முள்ளங்குறிச்சி, அதிரான்விடுதி, மழையூர், தீத்தானப்பட்டி, மாங்கோட்டை,ஆண்டிக்கோன்பட்டி, களபம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின்போது சமக, அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரூ.30 லட்சத்தில் டயாலிசிஸ் வாகனம் வழங்கிய சரத்குமார்

தென்காசி: தென்காசி எம்.எல்.ஏ.வும் சமக தலைவருமான சரத்குமார் ரூ.30 லட்சம் செலவில் டயாலிசிஸ் வாகனம் ஒன்றை தென்காசி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சலால் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

கடையநல்லூர், வடகரை, தென்காசி, புளியங்குடி, விகேபுரம், சுரண்டை என அனைத்து பகுதிகளிலும் இக்காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்காசி, நெல்லை ஆகிய இரு பகுதி மருத்துவமனைகளிலும் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தென்காசி மாவட்ட மருத்துவமனையில் ரத்தம் சேமிக்கவும், ரத்தத்தை சுத்தீகரித்து நோயாளிகளுக்கு ஏற்றவும் போதிய வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இதனை போக்கும் வண்ணம் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், சமக தலைவருமான சரத்குமார் தனது சொந்த பணத்தில் ரூ.30 லட்சம் செலவில் தென்காசி மாவட்ட மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்யும் கருவி பொருத்தப்பட்ட வாகனம் வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜய், அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரிடம் அந்த வாகனத்தின் சாவியை அவர் வழங்கினார்.

பின்னர் அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் துரையப்பா, சரத்குமார் மற்றும் மருத்துவமனை உயர் அதிகாரிகள் தென்காசி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக விழிப்புணர்வு பேரணியும் நடந்தது

Wednesday, May 30, 2012

பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும்-மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை

சென்னை : பெட்ரோல் விலை உயர்வை முழுமையாக வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:  மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் சமீபத்தில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 7.50 வரை உயர்த்தி நாட்டு மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளனர்.

இந்நிலை யில் மத்திய நிதியமைச்சர், பெட் ரோல் மீது மாநிலங்கள் விதித்து வரும் வரியை குறைக்க வேண்டும் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பெட்ரோல் விலை உயர்வை தடுக்க மாற்றுவழி காண்பதை விட்டுவிட்டு மாநில அரசுகள் மீது நிதிச்சுமையை ஏற்றி வைப்பதில் எந்தவித நியாயமுமில்லை. அது தவறான பொருளாதார மேலாண்மையும் கூட என்பதை சுட்டிகாட்டுவதுடன் மத்திய அரசையும் கண்டிக்கிறோம். எனவே, மத்திய அரசு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை முற்றிலும் உடனடியாக வாபஸ் பெறவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, April 22, 2012

கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்கவேண்டுமென கோரி ஆர்ப்பாட்டம்

கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும் என்று மத்திய அரசை
வலியுறுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் வரும் 30 ம் தேதி  நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

    குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மின்பற்றாக்குறை காரணமாக கல்வி, தொழில், விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்கள் பாதிக்கப்ப ட்டுள்ளனர். தற்போது கூடங்குளம் அணு மின்நிலையத்தில் முதல் இரண்டு அணு உலைகள் மூலம் 2 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இந்த மின்சாரம் அனைத்தையும் தமிழகத்துக்கே வழங்க வேண்டும்.  மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வரும் 30 ம் தேதி தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.

இதேவேளை, 'தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்பற்றாக்குறையை கூடங்குளம் அணுஉலையால் தீர்த்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை தொடங்கப்பட்டால் தமிழ்நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்ற தமிழக அரசின் பிரசாரம் ஒரு அப்பட்டமான பொய்' என அணு உலை ஆராய்ச்சியாளரும் பொறியியயாளருமான நீரஜ் ஜெயின் நேற்று கோவையில் நிருபர்களுக்கு கருத்து கூறியிருந்தார்.

கூடங்குளம் அணுஉலைகளில் தற்போது நிறுவப்பட்டுள்ள உலைகளின் உற்பத்தி திறன் 2000 மெகாவாட்.கூடங்குளம் 2 அணுஉலைகளிலும் 1000 மெகாவாட் மின்உற்பத்தியாகிறது என்றால், அணுஉலையானது தன் சொந்த தேவைக்கு 10 சதவீதம் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும். மீதமுள்ள 900 மெகாவாட் மின்சார உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு 30 லிருந்து 40 சதவீதம் மின்சாரம் அளிக்கிறார்கள்.

இதில் 20 சதவீதம் மின்கடத்தல் மூலம் நஷ்டம் அடையும். அந்த 20 சதவீத்தையும் கழித்தால் மீதி 20 சதவீதம் தான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும்.அப்படியென்றால் மொத்தம் 290 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கும்.

தமிழகத்திற்கு தற்போது 3500 மெகாவாட் மின்பற்றாக்குறை உள்ளது. இதில் 290 மெகாவாட் மின்சாரம் எவ்வளவுக்கு பயன்படுத்த முடியும் என அவர் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சட்டீஸ்கரில் கடத்தப்பட்ட கலெக்டரை பாதுகாப்பாக உடனே மீட்க வேண்டும் : சரத்குமார் கோரிக்கை

சென்னை, ஏப்.22:சத்தீஷ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியை மீட்பதற்கு மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சத்தீஷ்கர் மாநிலத்தில் உள் சுக்மா மாவட்டத்தில் கலெக்டராக பணியாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் மேனன் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார்.

அந்த மாவட்டத்தில் மக்கள் பணியை மேற்கொண்டுவிட்டு வீடு திரும்பியபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  அவருக்கு பாதுகாப்பாக சென்ற 2 காவலர்களும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட அலெக்ஸ் மேனனை உடனடியாக மீட்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஏற்கனவே ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏவை மீட்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டுவது போல் இந்த விஷயத்திலும் இல்லாமல் சத்தீஷ்கர் மாநில அரசுடன் இணைந்து ஐஏஎஸ் அதிகாரி அலெக்ஸ் மேனனை மீட்பதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு விரைவாக எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Thursday, April 12, 2012

சரத்குமார் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மீண்டும் சித்திரை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டு தினமாக இந்த ஆண்டு முதல் அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தை உழவர் பெருவிழா நாளாகக் கொண்டாடி, விவசாயப் பெருமக்களுக்கு பல்வேறு சலுகைகளையும் வழங்கி தமிழகத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வித்திட்டிருப்பதும் இன்றைய தமிழ்ப் புத்தாண்டில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகம், வேளாண்மைத் துறை மட்டுமல்லாது, கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வியத்தகு வளர்ச்சி பெற்று, தமிழக மக்கள் மகிழ்வோடும், சிறப்போடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Wednesday, April 4, 2012

தென்காசியை தனிமாவட்டமாக அமைத்திட வேண்டும்-சரத்குமார் கோரிக்கை

சென்னை, ஏப்.- 4 - தென்காசியை தனிமாவட்டமாக அமைத்திட வேண்டும் என்றும் சட்டப் பேரவையில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் கோரியுள்ளார். பட்ஜெட் மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:- தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனிமாவட்டம் அமைத்திட வேண்டும் தென்காசி நகராட்சியில் கடும் குடிநீர் தட்டுபாடு நிலவுகிறது. தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட 4 இடங்களில் நீர் உந்து நிலையங்கள் உள்ளன. அதில் 4 பகுதி மின் இணைப்புகள் உள்ளன. இந்த திட்டத்திற்கு நீர் வழங்கும் போது அந்த இடத்தில் மின்சாரம் இருந்தால் மறு இடத்தில் இருக்காது. இதனால் மின்சார தடையால் நீர் உந்துவதில் தடைபடுகிறது. இதை தவிர்த்திட தாமிரபரணி நீர் உந்துதல் ஆரம்ப இடத்திலிருந்து 4 நிலையங்களுக்கும் ஒரே இடத்தில் இருந்து மின் இணைப்பு வழங்க வேண்டும். இதனால் குடிநீர் நகராட்சி மக்களுக்கு போதுமான அளவில் கிடைத்துவிடும். இந்த இணைப்பிற்கு அரசு உத்தரவிட வேண்டும். தென்காசி நகரில் அமைக்கப்படவுள்ள புற வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த அரசு நிதி வழங்கியுள்ளது. சாலைக்கும் இந்த ஆண்டே நிதி வழங்கி அப்பணி நிறைவு செய்திட வேண்டும். தென்காசி நகரில் பழைய பேருந்து அருகிலுள்ள குளத்தை ஆழப்படுத்தி, படகு போக்குவரத்து இதர ஏற்பாடுகள் செய்து சுற்றுலா இடமாக மாற்றிட ஆவண செய்திட வேண்டும். ஆளுநர் உரையில் 2011-12-ல் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ கல்லூரியை தென்காசி தொகுதியில் அனுமத்திட வேண்டும். வீரகேரளம் புதூரில் கால்நடை மருத்துவமனை அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர் வட்டத்திலுள்ள ஊத்துமலை அதை சுற்றியுள்ள 15 ஊராட்சிகள் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுதால் இதற்கென தாமிரபரணியில் இருந்து ஒரு குடிநீர் திட்டத்தின் மூலம் ஊத்துமலையை மையமாக வைத்து குடிநீர் திட்டம் அமைத்திட வேண்டும். வீரகேரளம்புதூர்  ஊராட்சி வீராணம் ஊத்துமலை, வழியாக சங்கரன்கோவில், ஆலங்குளம், திருநெல்வேலி செல்லும் அனைத்து சாலைகளும் பழுதடைந்துள்ளன. இதற்கென ஒரு சிறப்பு நிதி ஒதுக்கி சாலைகளை சரி செய்திட வேண்டும். பாவூர்சத்திரம், சுரண்டை ஆகிய இடங்களில் விவசாயிகள் பயிரிடும் காய்கறிகள், பழங்கள், மிளகாய், வெங்காயம் இவைகளை  பாதுகாத்திட குளிர்சாதன வசதியுள்ள கிடங்குகள் அமைத்திட வேண்டும். தென்காசி தொகுதியில் சுந்தரபாண்டியபுரம், வீ.கே.புதூர் ஆகிய இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்திட வேண்டும். ஊத்துமலையை சுற்றி மேய்ச்சல் நிலங்கள் அதிகம் இருப்பதால் வறுமைக் கோட்டு விவசாயிகள் விவசாய கூலிகளுக்காக கறவை மாடுகள், ஆடுகள் அரசின் மானிய உதவி மற்றும் வங்கி கடன் மூலம் பெற்றிட சிறப்பு திட்டம் அரசு வழங்க வேண்டும்.
குற்றாலத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுந்திடவும், மக்கள் நாள் முழுவதும் சுற்றுலாவை அனுபவிக்க ஒரு கொள்கை விளக்க பூங்கா அமைத்திட வேண்டும்.
தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் தென்காசி பகுதி விவசாயிகளுக்கு விதை சேமிப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.25 லட்சத்தை வேறு இடம் தேர்வு செய்து விதை சேமிப்பு கிடங்கு கட்டிட வேண்டும்.
தென்காசியில் அமைந்துள்ள பட்டு வளர்ச்சி துறையில் ஊழியர் கூடுதலாக்கி பட்டு வளர்ச்சியை விவசாயிகளிடம் விளக்கி அதிக அளவு பயிரிட வேண்டும்.
தென்காசி நகரில் நகரம் பாதுகாப்புக்காக மேலும் ஒரு காவல் நிலையம் அமைத்திட வேண்டும்.
குற்றாலத்தில் சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் ஒன்றை திறந்துமக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
திருக்குற்றால குறவஞ்சியை பாடிய திருகூட ராசப்ப கவிராயருக்கு விழா எடுத்திட  வேண்டும்.
குற்றாலத்தின் அருகிலுள்ள கேரள அரசின் கல்லடா சுற்றுலா மையத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய சுற்றுலா மையமாக குற்றாலத்தை அமைத்திட வேண்டும்.
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைத்திட வேண்டும்.
இதற்கென முன்பு மருத்துவமனையாக இருந்த இடத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
பாவூர்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் அளவுக்கு வாறுகால், சிறுபாலங்கள் அமைத்திட வேண்டும்.
தென்காசி தலைமை மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், மற்றும் போதுமான மருத்துவர்களையும் இதர அலுவலர்களையும் நியமித்திட வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையம் பாவூர்சத்திரம் சுந்தரபாண்டியபுரம், அரியப்பபுரம் ஆகியவைகளில் பெண் மருத்துவர்களையும், போதுமான மருத்துவர் மற்றும் ஊழியர்கள் நியமித்திட வேண்டும். நோயாளிகளுக்கு ஒவ்வொரு நிலையத்திலும் 20 படுக்கைகள் அமைத்திட வேண்டும்.
தென்காசி அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன், வைப்பதற்கு கட்டிடமும், சித்த மருத்துவப் பிரிவுக்கு வழங்கப்பட்ட கருவிகளை மக்கள் பயன்படுத்திட ஒரு கட்டிடமும் கட்டிட நிதி ஒதுக்கிட வேண்டும்.
சுரண்டை பேரூராட்சி பகுதியில் அரசுப் பேரூந்து பணிமணை ஒன்ற அமைத்திட வேண்டும்.
கிராமங்களிலுள்ள அனைத்து மக்களுக்கும் கழிவறை வசதியை அரசே செய்து கொடுத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, March 17, 2012

ரயில்வே பட்ஜெட் வருத்தம் அளிக்கிறது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிக்கை:-

தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:-

எட்டு ஆண்டுகளுக்கு பின் ரயில் பயணக் கட்டண உயர்வு மற்றும் வழக்கமான அறிவிப்புகளை ரயில்வே பட்ஜெட் கொண்டுள்ளது. சாதாரண மக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் சாதாரண வகுப்பு கட்டணங்களை உயர்த்தி இருக்க வேண்டாம்.

தமிழகத்தை பொருத்தவரை முன்பு அறிவிக்கப்பட்ட பணிகள் மித வேகத்தில் நடைபெற்று வருகின்றன. அல்லது தொடங்கப்படாமல் அறிவிப்பாகவே உள்ளன.

குறிப்பாக, நெல்லை , தென்காசி அகல ரயில்பாதை, நெல்லையில் இருந்து பிற பெரு நகரங்களுக்கு புதிய ரயில் சேவைகள், நெல்லை , சென்னை இருவழிப்பாதை என பல திட்டங்களை கூறலாம்.

சென்னை ராயபுரம் புது டெர்மினல் அமைய இருப்பது, சென்னை , பெங்களூரு தினசரி மாடி ரயில், வாரத்தில் சென்னை , பூரி மார்க்கத்தில் ரயில், மதுரை , திருப்பதி ரயில் சேவை அதிகரிப்பு என பல அறிவிப்புகளும், நடப்பாண்டில் 1 லட்சம் பேருக்கு வேலை என்ற அறிவிப்பும் வரவேற்கதக்கவை. பல இடங்களில் ரயில்வே மேம்பால பணிகள் மிகவும் மிதமான வேகத்தில் நடந்து வருகிறது

அந்த வகையில் தென்காசி ரயில்வே மேம்பால பணியும் தடைபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகம் இப்பணியை விரைந்து முடித்து, அப்பகுதி போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும்.

பல திட்டங்கள் அறிவித்திருந்தாலும், அவைகளை உரிய காலத்தில் நிறைவேற்றி பயணிகளின் வசதிகளையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஒரு சராசரி பட்ஜெட் என்ற அளவிலேயே அமைந்திருப்பது வருத்தம் அளிப்பதாக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

ராஜினாமா செய்ய நான் ரெடி - நீங்க ரெடியா? - விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்!

கோவில்பட்டி- மார்ச் 17 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ., நடிகர் குண்டுகல்யாணம், இயக்குநர் ஆர்.வி .உதயக்குமார் ஆகியோர் மைப்பாறை, நடுவிற்பட்டியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ்ஈடுபட்டனர். அப்போது சரத்துகுமார் எம்.எல்.ஏ.பேசுகையில் மாற்றம் தந்த மக்களுக்கு ஏற்றம் தந்து கொண்டியிருக்கிறது தமிழக அரசு. தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அவர் இன்றைக்கு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் தொலை நோக்கம் கொண்டவை. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதனை அறிந்த தமிழக முதல்வர் தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்றநோக்கத்தில் செயல்பட்டு கொண்டியிருக்கிறார்.

தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின்தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிப்பு செய்யாமல் இருந்ததே காரணம்.இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார்.அதனால் மின்தட்டுப்பாடு விரைவில் சரியாகும்
அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு குறை கூறும் விஜயகாந்த் ரிசிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்யவேண்டும், நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன். இருவரும் ரிசிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். நான் நிற்க தயார்? விஜயகாந்த் தயாரா?. இன்றைக்கு தமிழக மக்களின் வாழ்க்கை முன்னேற்த்திற்காக பல நல்ல திட்டங்களை தரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்தியாவின் பிரதமராகும் தகுதியுடையவர். அப்படி பட்டவரின் கரத்தை வலுப்படுத்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவை அமோகா வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.      

அப்போது, தமிழக அமைச்சர் ரமணா, எம்.எல்.ஏக்கள் கடம்பூர் செ.ராஜு (கோவில்பட்டி), எர்ணாவூர் நாராயணன் (நான்குநேரி), தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலர் இராமானுஜம்கணேசன், நகர எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலர் கணேசன், மாவட்ட விவசாய அணி இணை செயலர் ராமச்சந்திரன், ஒன்றிய ஜெ. பேரவை செயலர் ்ஸ்வரப்பாண்டியன், அதிமுக நிர்வாகிகள் அமிர்தராஜ்பாண்டியன்,அல்லிக்கண்ணன், அல்லித்துரை, செண்பகராமன், ரவி,ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதா தயவில் வெற்றி பெற்றுவிட்டு தற்போது அவரை குறித்து குறை கூறும் விஜயகாந்த் ராஜினாமா செய்ய தயாரா என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சவால் விடுத்துள்ளார்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது,

தேர்தலின் போது கொடுக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் உள்ளது என்பதை அறிந்து, தரமான கல்வி, கல்விகேற்ற வேலை, வேலைக்கேற்ற ஊதியம் ஆகியவற்றை இளைஞர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கத்தில் செயல்பட்டு வருகின்றார்.

இந்தியாவிற்கே பிரதமராகும் தகுதி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டு. தமிழகத்தில் இன்றைக்கு நிலவும் மின் தட்டுப்பாட்டிற்கு காரணம் திமுக அரசு தான். அவர்கள் ஆட்சியில் இருந்த போது புதிய மின்திட்டங்கள் எதுவும் உருவாக்கபடவில்லை மற்றும் பழைய மின்திட்டங்களை பாராமரிக்காமல் இருந்ததே காரணம்.

இந்த நிலையை மாற்ற தமிழக முதல்வர் தனிகவனம் செலுத்தி பல புதிய மின்திட்டங்களை துவங்கியுள்ளார். அதனால் மின் தட்டுப்பாடு விரைவில் சரியாகும். அதிமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று விட்டு, முதல்வர் ஜெயலலிதா குறை கூறும் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் ராஜினமா செய்ய வேண்டும். நானும் தென்காசியில் ராஜினமா செய்கிறேன்.

இருவரும் ரிஷிவந்தியத்தில் எதிர்த்து நின்று போட்டியிடுவோம். அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்போம். போட்டிக்கு நான் தயார்? விஜயகாந்த் தயாரா? என்றார்.

Tuesday, March 13, 2012

விஜயகாந்துக்கு சரத்குமார் சவால்

 அதிமுக ஆதரவுடன் வெற்றி பெற்ற 29 எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்திக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் தயாரா என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் எம்எல்ஏ சவால் விடுத்துள்ளார்.
.
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வேட்பாளரை பெறும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று அவர் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் எஸ்.முத்துச்செல்வியை ஆதரித்து அமைச்சர் கே.டி.பச்சமால் தலைமையில் சேர்ந்தமரம் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசும் போது, தமிழக மக்கள் தமிழகத்தில் நடைபெற்ற ஊழல் ஆட்சியை ஒழித்துக் கட்டி ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தீர்கள். அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக ஒரே ஊழலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்து உலக சாதனை படைத்ததோடு அவர்களின் கட்சி கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா இன்றும் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தும் அவர்கள் உங்களிடம் ஓட்டு கேட்க வருகின்றனர்.
மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு முழு காரணமே திமுக அரசுதான். திமுக ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தொழிற்சாலை தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்கள்.
ஆனால் அந்த தொழிற்சாலை தொடங்குவதற்கு மின்சாரம் தேவை என்பதை சிறிதும் சிந்திக்காமல் எந்தவித திட்டமிடலும், தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் செயல்பட்டதுதான் இந்த மின்பற்றாக் குறைக்கு காரணம். மேலும் திமுக ஆட்சியின் போது வடசென்னையில் உள்ள அனல் மின் நிலையமும், தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்திலும் சரியான முறையில் பராமரிக்காமல் உற்பத்தி குறைவானது.
முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் திமுக அரசு விட்டுச் சென்ற 1 லட்சம் கோடி கடனையும் சுமந்து கொண்டு பாராமுகமாக இருக்கும் மத்திய அரசின் நிதியுதவியும் இல்லாமல் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக கொண்டு வரவும் முதல்வர் ஜெயலலிதா கடுமையாக உழைத்து வருகிறார். மின் தட்டுப்பாட்டை போக்குவதற்காக அனல் மின் நிலையங்களை பராமரிக்கவும், உடன்குடி அனல் மின் நிலைய
திட்டத்தை கொண்டு வரவும் துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்.  அத்துடன் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார்.
இன்றைக்கு அதிமுக ஆதரவுடன் 29 எம்எல்ஏக்களை பெற்றுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கவர்னர் ஆட்சி வந்தால் தேர்தலில்  போட்டியிடுவோம் என்று கூறுகிறார். நான் கேட்கிறேன். 29 எம்எல்ஏக்களை நீங்கள் அதிமுக ஆதரவுடன்தான் பெற்றுள்ளீர்கள். முதலில் 29 பேரும் ராஜினாமா செய்து விட்டு தனியாக போட்டியிட்டு ஜெயித்து காட்டுங்கள். 
தமிழக மக்களுக்காக உழைத்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் முத்துச்செல்வியை அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற இரட்டை இலை         சின்னத்தில் அனைவரும் வாக்களியுங்கள் என்று பேசினார்.இக் கூட்டத்தில் அமைச்சர் ராஜா செந்தூர்பாண்டி, சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் ஏ.நாராயணன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயபிரகாஷ், இலக்கிய அணி செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் தங்கராஜ், சங்கரன்கோவில் ஒன்றிய செயலாளர் ராயப்பன், அதிமுக ஒன்றிய செயலாளர் முருகையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சரத்குமார் எம்எல்ஏ இன்று சங்கரன்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட தளவாய்புரம், செந்தட்டி, வேப்பங்குளம், நெடுங்குளம், நெசவாளர் காலனி, என்ஜிஓ காலனி, புளியப்பட்டி ஆகிய இடங்களில் அதிமுக வேட்பாளர் முத்துச் செல்விக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரித்தார்.

Saturday, March 3, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் சமத்துவ மக்கள் கட்சியில் 9 குழுக்கள் அமைப்பு

சென்னை, மார்ச்.- 3 - சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச் செல்வியின் வெற்றிக்கு பாடுபட சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் சரத்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் முத்துச்செல்வியின் வெற்றிக்காக தேர்ல் பணிகளில் ஈடுபட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பகுதி வாரியாக 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:-

மேல நீலித நல்லூர் ஒன்றியம் (மேற்கு பகுதி) - மாநில துணைத் தலைவர் நாராயணன் எம்.எல்.ஏ, மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.வி.கணேசன், எம்.விசுவாசம், வி.எம்.ராயப்பன், எம்.பி.ராமராஜா, ஜே.ராம் கபிலன், குமுதா, சுரேஷ் கண்ணன், செல்லப்பெருமாள். மேல நீலித நல்லூர் ஒன்றியம் (மேற்கு) - மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன்,  மாநில அமைப்புச் செயலாளர், ஆர்.கே.காளிதாஸ், ஜே.ராபர்ட்சன், ஆர்.வி.ராமர், எல்.அகஸ்டின் தங்கராஜ், பி.தமிழழகன், சோனா மஹேஷ், ஆல்வின். மேல நீலித நல்லூர் கிழக்கு (கிழக்கு) ஆர்.ஜெயப்ரகாஷ் மாநில கொள்கைபரப்பு செயலாளர், நெல்லை கணேசன், மணி, கணபதி தேவர், வெள்ளைத்துரை பாண்டியன், கே.பி.காலசாமி, ராஜசேகரப் பாண்டியன், பி.ஆர்.எல்.காமராஜ்.

சங்கரன்கோவில் நகரம் (1 முதல் 15 வார்டு வரை) - என்.எம்.எஸ்.விவேகானந்தன் மாநில கலை இலக்கிய அணி செயலாளர், கனகவேல், ஆறுமுகசாமி, துரைராஜ், பஞ்சாங்கம், ராஜேஸ்வரி, பாலகணேஷ், சேவுகபாண்டி, ஜெயலட்சுமி.

குருவிக்குளம் (தெற்கு) - என்.சுந்தர் தென் மண்டல செயலாளர், எஸ்.சுதாகர் மாநில தொழில்சங்கத்தலைவர், ரஞ்சித், முருகன், காமராஜ், செல்வம், வினோத்குமார், சேர்மன். குருவிக்குள் (வடக்கு) - ஜி.ஈஸ்வரன் மதுரை மண்டல செயலாளர், ஜெயக்குமார், நாகமணி, ராஜபாண்டி, மாடசாமி, ஜே.ஆர்.எஸ்.ராஜரத்தினம், டேவிட், கணேசன்.

மேலநீலித நல்லூர் (கிழக்கு) - டி.ஆர்.தங்கராஜ் மாவட்டச் செயலாளர், டி.டி.என்.லாரன்ஸ் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், புலிப்பாண்டியன் (எ) சுப்பையா, கே.விஜயன், முத்துராம், மூர்த்திப் பாண்டியன், ராம்குமார், எஸ்.அந்தோனியம்மாள், ராமர்.


சங்கரன்கோவில் நகரம் (16 முதல் 25 வார்டு வரை) - கே.வி.கே.துரை மாவட்ட இளைஞரணி செயலாளர், முத்துராஜ், திருமலைசாமி, ஐயப்பசாமி, முருகேசன், அருணா, சீனிவான், அருணாச்சலம், இருளப்பன். சங்கரன்கோவில் ஒன்றியம் - கனகவேல், மகாலிங்கம், ஜெயக்குமார், பி.ஆர்.எல்.ஆறுமுகம், இலக்கியன், கார்த்திக், ராம்குமார், மகேஷ்.

மேலும் தேர்தல் பிரச்சாரப்பணிக்காக கட்சியின் அவைத்தலைவர் வி.செல்வராஜ்  ஐ.ஏ.எஸ் அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள், ஏ.என்.சுந்தரேசன், திண்டுக்கல் இரா.மணிமாறன் முன்னாள் எம்.எல்.ஏ, என்.என்.சண்முகசுந்தரம் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tuesday, February 28, 2012

பள்ளிகளுக்கு ஜெனரேட்டர்: ஜெயலலிதாவுக்கு சரத்குமார் பாராட்டு

சென்னை: பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்க முடிவு செய்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சமக தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தின் மின் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில் மக்களின் தேவைக்கேற்ப மின் உற்பத்தியை பெருக்குவதற்கு கடந்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் தமிழகம் மின் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது.

இதை சீர்படுத்தும் வகையில் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் வெளிப்பாடாக பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி கற்பதற்கும், அதனை ஊக்குவிப்பதற்கும் தமிழக அரசு பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குதல், 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் போன்ற நல்ல பல திட்டங்களை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பள்ளி இறுதித் தேர்வு நெருங்கும் நிலையில் மின்பற்றாக்குறை காரணமாக மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் அரசு பள்ளிகளுக்கு தமிழக அரசே ஜெனரேட்டர்களை வாடகைக்கு அமர்த்தி அதற்கு உண்டான டீசல் உள்பட அனைத்து செலவுகளையும் வழங்குவதோடு, அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளிலும் வாடகைக்கு ஜெனரேட்டர்கள் எடுத்தால் அதற்குண்டான கூடுதல் செலவுகளை அரசே ஏற்கும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரியது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 22, 2012

கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தை கைவிட வேண்டுகோள்

சென்னை,பிப்.21 - கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறப்பதற்கு நாட்டின் நலன் கருதி உதயகுமார் குழுவினர் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அவர்விடுத்துள்ள அறிக்கை வருமாறு; கூடங்களம் அணுமி ன் நிலையம் மூடப்படவேண்டும் என்று உதயகுமார் தலைமையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது அனைவரும் அறிந்ததே . கூடங்குளம் அணுமி ன் நிலையம் திறப்பதால் அப்பகுதியில் வாழ்கின்ற மக்களுக்கு அபாயம் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தின் அடிப்படையில் இப்போராட்டம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், முதலமைச்சர் ஆணைக்கிணங்க, போராட்ட குழுவினருடன் இணைந்து பாரத பிரதமர் அவர்களை சந்தித்து, மக்களின் அச்ச உணர்வை போக்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் மீண்டும் மத்திய அரசு ஒரு குழு அமைத்து மக்களின் அச்ச உணர்வை போக்கும் முயற்சியை தொடர்ந்து வருகிறது போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் முதல் அமைச்சர் அண்மையில் நடந்த சட்டமன்றத் தொடரில் அறிவித்தபடி கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆர்.சீனிவாசன் தலைமையில் தமிழ்நாட்டின் சார்பில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்து வருகின்றனர். அக்குழு அரசிடம் கூடிய விரைவில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.
கடந்த கால ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கினாலும், மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வருங்காலத்தில் மேலும் மேலும்  மின்சார தேவை அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தும், அதற்காக தீர்க்கமான முடிவு எடுக்காத காரணத்தினாலும், மின் கசிவினாலும், மின்திருட்டினாலும் அனல் மின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளை சரிவர கவனிக்காததாலும், மின் தேவையை சமாளிக்க முடியாமல் மின் தடையினால் கடந்த ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிவோம்.
முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம் மிகமிக அவசியம் என்பதை நன்கு உணர்ந்து, போர்க்கால அடிப்படையில் மின்சாரத் துறையை சீர்படுத்துகின்ற பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பராமரிப்பு பணிகளின் மூலம், மின் உற்பத்தியை சீர்படுத்த முயற்சி எடுத்து,  தமிழகத்தை மின் வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார்கள். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப் சிறிய, பெரிய தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட மின் தேவைகள், மின் உற்பத்தியைவிட அதிகரித்துக் கொண்டே இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு என்ன செய்வதென்று நாம் சிந்திக்கிற போது கையில் வெண்ணெய் இருக்கையில் நெய்க்கு அலைவானேன்? என்ற பழமொழிக்கேற்ப உடனடி நிவாரணம் அளிக்க நம் கண் எதிரே தோன்றுவது கூடங்குளத்தின் மூலமாக நமக்கு கிடைக்க இருக்கும் 925 மெகாவாட் மின்சாரம் என்பதை நாம் உணர வேண்டும். அடுத்தடுத்து 3-வது, 4-வது அணு உலைகள் தொடங்கப்படும் போது மேலும் 2000 மெகாவாட் மின்சாரம் கிடைக்க இருப்பதாகத் தெரிகிறது.
முதலமைச்சர் எண்ணமும், தமிழக மக்கள் அனைவரின் எண்ணமும், உதயகுமார் எண்ணமும், நமது எண்ணமும், நம் மக்களின் அச்சத்தை போக்க வேண்டு என்பதுதான். அந்தப்பணியை நாம் ஒன்றுபட்டு செய்திட முடியும். அதேசமயம் தமிழக மக்களின் வேதனைகளை புரிந்து கொண்டு நேற்று மின் வெட்டினால் பாதிக்கப்படுகின்ற தொழிற்சாலைகள், அதனால் பாதிக்கப்படுகின்ற தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் கல்விக்கூடங்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் இருளில் தள்ளப்படுவதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
ஆக நாட்டு மக்களின் நலன்கருதி, நமது நாட்டின் முன்னேற்றத்தை மனதில் கொண்டு, தமிழகத்தை இருள் சூழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சுகின்ற நிலையில் உதயகுமார் அப்பகுதி மக்களும் மாநில, மத்திய அரசின் மீது நம்பிக்கை கொண்டு தமிழகம் ஒளிபெற, கூடங்குளம் பகுதி மக்களின்  பாதுகாப்பு நிலையை உறுதிசெய்திட நாம் இணைந்தே பாடுபடுவோம். போராட்டக் குழுவினர் கூடங்களம் அணுமின் நிலையம் திறக்கப்பட நல் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமாய் அன்புடன்  கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tuesday, February 21, 2012

கச்சத்தீவை மீட்கக்கோரி ராமேசுவரத்தில் சரத்குமார் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரம், பிப். 19-
இலங்கை கடற்படையை கண்டித்தும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து அதனை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் ராமேசுவரம் பஸ் நிலையத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி கட்சியின் தலைவர் சரத்குமார் பேசிய தாவது:-
இந்தியா-இலங்கை இடையே உள்ள கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதில் இருந்து தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை மீண்டும் இந்தியாவுடன் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கையில் தற்போது சீனா தனது படைகளை படிப்படியாக குவித்து வருகிறது. இது நமது நாட்டிற்கு ஆபத்து ஆகும். இந்த ஆபத்தில் இருந்து மீள வேண்டுமானால் கச்சத் தீவை மீட்டு அங்கு நமது பாதுகாப்புக்காக படை பலத்தை நிறுத்த வேண்டும். ரோந்து பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும்.
இருநாட்டு மீனவர்களையும் அழைத்து சுமூகமான முறையில் மீன் பிடிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
கச்சத்தீவை மீட்பதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்பட மாவட்ட, மாநில நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இலங்கையில் சிறைபிடித்து வைக்கப்பட்டு உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரின் குடும்பத்திற்கு சரத்குமார் தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Friday, February 10, 2012

சங்கரன்கோவில் தேர்தல்: சரத்குமார் அ.தி.மு.கவுக்கு ஆதரவு

சென்னை, பிப். 11 - சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆதரித்து தேர்தல் பணியாற்ற சமத்துவ மக்கள் கட்சி சார்பில் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அமைத்துள்ளார். அந்த குழுவில் நாங்குநேரி சட்டப் பேரவை உறுப்பினர் நாராயணன், பொதுச் செயலாளர் நாகராஜன், கொள்கை பரப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், துணை பொதுச் செயலாளர் சுந்தரேசன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுவர் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி எம்எல்ஏ ஏ.நாராயணன் மகள் திருமணம்

சென்னை, பிப்.3: முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஏ.நாராயணன் தனது மனைவி லதாவுடன் சந்தித்து தனது மகளின் திருமணத்துக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்த வேண்டும் என அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினார்.இந்த சந்திப்பின்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சரத்குமார் உடன் இருந்தார்.

சென்னை: சமத்துவ மக்கள் கட்சி துணைத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், லதா தம்பதியரின் மகள் சகிலா, திருச்சி கே.ஏ.எஸ்.ராம்தாஸ், ராஜேஸ்வரி தம்பதியரின் மகன் கே.ஏ.எஸ்.ஆர்.பிரபு திருமணம் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலில் நேற்று காலை நடந்தது. மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். சமத்துவ மக்கள் கட்சி நிறுவன தலைவர் சரத்குமார் எம்எல்ஏ, அவரது மனைவி ராதிகா ஆகியோரும் மணமக்களை வாழ்த்தினர். இராவணன் மசாலா குழுமத்தின் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு நாடார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் எச்.ஸ்டீபன், வண்ணாரப்பேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க பொருளாளர் கே.எஸ்.மூர்த்தி, பொதுச் செயலாளர் விவேக் சிவசாமி, சமக மாநில அமைப்பு செயலாளர் பாவூர் சத்திரம் ஆர்.கே.காளிதாஸ், துறைமுகம் பகுதி வடசென்னை மாவட்ட நாடார் பேரவை தலைவர் கே.மகராஜன், கராத்தே ச.ரவி, மற்றும் சமக நிர்வாகிகள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், பல்வேறு கட்சியினர் மணமக்களை வாழ்த்தினர். திருமணத்துக்கு வந்தவர்களை எர்ணாவூர் ஏ.நாராயணன், சென்னை டீலக்ஸ் ஓட்டல் இயக்குனர் என்.கார்த்திக் வரவேற்றனர்.
 

Monday, January 9, 2012

பென்னிகுயிக் நினைவாக மணிமண்டபம்: தமிழக முதல்வருக்கு சரத்குமார் பாராட்டு

இந்தியாவின் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த செலவில் கட்டி முடித்த இங்கிலாந்து நாட்டு பொறியாளர் பென்னிகுயிக் நினைவை போற்றும் வகையில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சட்டமன்ற உறுப்பினர் நடிகர் சரத்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய ஆங்கிலேயர் பென்னிகுயிக்கு லோயர் கேம்பில் ரூ.1 கோடி செலவில் சிலையும் மணிமண்டபமும் அமைக்க இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை கடந்த 1887-ல் கட்டத் தொடங்கி 1895-ல் கட்டி முடிக்கப்பட்டது. கட்டத் தொடங்கிய பின்பு நிதி பற்றாக்குறையால் அணை பாதியிலேயே நின்று விட்டதையறிந்த பென்னி குயிக் மிகவும் வருந்தி இங்கிலாந்தில் உள்ள தனது சொத்துக்களை விற்றார்.
பின்பு அதன் மூலம் கிடைத்த பணத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி அணையின் நீர் பாசனத்தை தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு திருப்பி விட்டார்.
இதனால் தமிழகத்தின் விவசாயத்திற்கும், குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைத்த ஆங்கிலேயர் பென்னிகுயிக் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும் அமைப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதற்கு சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லை பெரியாறு அணைப்பிரச்சினையில் இரு மாநிலங்களுக்கு இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமான நல்லிணக்கம் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக மணிமண்டபம் அமைப்பது நமது தேசத்தலைவர்களுக்கும், தியாகிகளுக்கும் தான் என்ற மரபில் இருந்தது. ஆனால் தமிழக மக்களின் விவசாயத்திற்கு தண்ணீரும், குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்த்த கர்னல் பென்னிகுக் என்ற தனி மனிதனுக்கு நன்றி கடனாக இன்று சிலையையும், மணிமண்டபமும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்வதில் தமிழகமே பெருமையடைகிறது என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அதிமுக அரசு தொடர வேண்டும்: சரத்குமார்

மாணவர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் அதிமுக அரசு தொடர வேண்டும் என்று இந்திய மாநிலமான தமிழகத்தில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக சட்டசபை உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாவூர் சத்திரம் அருகேயுள்ள குறும்பாலப்பேரியில் பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் ஞானசுந்தரம் தலைமை வகித்தார்.
இவ்விழாவில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் பேசியதாவது, கடந்த காலங்களில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாடெங்கும் 6 ஆயிரம் கல்வி நிலையங்களை திறந்த காமராஜரும், கல்வி நிலையங்களில் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயற்பட்டனர்.
அந்த வழியில் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆட்சியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். தற்போது மடிக்கணிணி வழங்கியுள்ளார்.
மேலும் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதற்கு கல்வி உதவித் தொகையும் வழங்கி வருகிறார். அவரின் ஆட்சி தொடர வேண்டும். தமிழர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை மேம்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கேராளவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் கேரள அரசின் நிர்பந்தத்திற்கு அடிபணியாமல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை நிறைவேற்றிட வலியுறுத்தி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழக அரசுக்கு அனைவரும் அனைத்து ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
மேலும் வரும் காலங்களில் குறும்பலாப்பேரி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தற்போது இயங்கி வரும் வாடகை கட்டிடத்தை மாற்றி சொந்த கட்டிடம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசி நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் செயற்படுத்தி தருவேன்.
மேலும் கீழப்பாவூர், ஆலங்குளம் ஒன்றியங்களை சேர்ந்த விவசாயிகள் பயன்படும் விதத்தில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை விரைவுபடுத்தி செயற்படுத்திட நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் 50 பேருக்கு ரூ.1500 வீதம் கல்வி உதவித் தொகையை சரத்குமார் வழங்கினார். பின்னர் கீழப்பாவூர் யூனியன் நிதியிலிருந்து அமைக்கப்படும் ரூ.8 லட்சம் செலவிலான சிமென்ட் ரோடு பணியை பார்வையிட்டார்.
தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து குறும்பலாப்பேரியில் உள்ள ஓடையை சிமென்ட் வாறுகாலாக மாற்றி அமைக்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான திட்டத்தை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அரியப்புரம், அய்யனூர் பகுதிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

வாகன ஓட்டிகளுக்கு வேகமல்ல, நிதானம் தான் முக்கியம்: சரத் குமார் பேச்சு

தென்காசி: கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 80 சதவீதம் இரு சக்கர வாகனங்களால் தான் நடந்துள்ளது என்று தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார் தெரிவித்தார்.

சாலை பாதுகாப்பு வாரவிழா தென்காசி ஜெகநாத் அரங்கில் நடந்தது. இந்த விழாவுக்கு நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமை வகித்தார். தென்காசி எம்.எல்.ஏ. சரத்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற தலைவர் பானு ஷமீம், துணை தலைவர் சுடலை, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் முருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் வெங்கட கிருஷ்ணன், செண்பகவல்லி, ரெட் கிராஸ் சுப்பிரமணியன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

விழாவில் சரத்குமார் பேசியதாவது,

தமிழகத்தில் அதிகமான வாகனங்கள் செல்லும் அளவுக்கு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது போன்ற சாலை பாதுகாப்பு வார விழாக்கள் நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 64, 986 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 2,000 பேர் பலியாகியுள்ளனர். இதில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நடந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நான்கு சக்கர வாகனங்களால் அதிக விபத்துகள் நடக்கிறது.

அதிக வேகத்தால் தான் விபத்துக்கள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு வேகம் முக்கியமல்ல, நிதானம்தான் முக்கியம். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும் என்றார்.

Thursday, January 5, 2012

திருச்சியில் ஜன.28-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம்

சென்னை, ஜன.6 - தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல்கள் நடத்துவதைக் கண்டித்து திருச்சியில் வரும் 28-ம் தேதி கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட மீனவர்களின் உயிர்களை நாம் பறிகொடுத்துள்ளோம். பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு தொடர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
மத்திய அரசு அவ்வப்போது தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு, உயிரிழந்து வருவதை வழக்கம்போல் வேடிக்கை பார்த்து வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குகிறபோது நமது கடற்படை என்ன செய்துகொண்டு இருக்கிறது. நம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தா வண்ணம் நமது கடற்படை பாதுகாப்பு அளிக்கக்கூடாதா? தமிழக முதலமைச்சர் சொல்லிவருவதுபோல தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு கருதவில்லையா? நாம் கச்சத்தீவை பறிகொடுத்து தான் இத்தகைய சூழல் ஏற்படுவதற்கு காரணம் என்பதை நாம் உணர்ந்து வேதனைப்படுகிறோம்.
இன்று கச்சத்தீவு பகுதிகளில் நம் இந்திய கடற்பகுதியில் நமது மீனவர்கள் மீன் பிடித்தால் கூட இலங்கை கடற்படையினர் தொடர் தாக்குதள்களில் ஈடுபட்டு வருகின்றனர். போர் அபாயம் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் கடற்பகுதிகளில் கூட நம் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதில்லை. ஆனால் நமது நேச நாடு என்று கூறிக்கொண்டே தமிழினத்தை அழித்துவரும் இலங்கை அரசு நம் தமிழக மீனவர்களையும் தாக்கி வருகின்றனர்.
இலங்கை கடற்படை நேற்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய போது ரவுடிகளைப்போல் கற்களையும், உருட்டுக்கட்டைகளையும் பயன்படுத்தி உள்ளனர். 50 படகுகளில் வந்து தாக்கியதாக தெரிகிறது. தமிழக மீனவர்களை மீன் வளம் நிறைந்த பகுதிக்குள் நுழைய விடமாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள். ஆனால் அவர்களிடமிருந்து நம் மீனவர்களை காப்பாற்ற வேண்டிய மத்திய அரசு கைகட்டி வாய் பொத்திக்கொண்டு இருக்கிறது.
அதேபோன்று முல்லைப்பெரியார் பிரச்சினையில் கேரள அரசு, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாதது மட்டுமின்றி, அந்த உத்தரவுக்கு எதிராக 142 அடி தண்ணீர் தேக்கி வைப்பதற்கு பதிலாக அதை 120 அடியாக குறைக்கவேண்டும் என்று மனு கொடுக்கிறார்கள். கேரள அரசின் இந்த செயலை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதேபோல் தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்காமை என்று எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நம் கோரிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
எனவே நம் தமிழர்களின் குரலை எதிரொலிக்கும் விதமாக, வருகிற ஜனவரி 28 சனிக்கிழமையந்று திருச்சி மாநகரில் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் எனது தலைமையில் தமிழகத்தைப் புறக்கணிக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் எந்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Sunday, January 1, 2012

மழையால் உயிரிந்தோர் குடும்பங்களுக்கு சரத்குமார் இரங்கல்

சென்னை, ஜன.1 - புயல் மற்றும் மழையால் உயிரிந்தோர் குடும்பங்களுக்கு சரத்குமார் எம்.எல்.ஏ இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:- கடந்த இரண்டு தினங்களாக தானே புயல் உருவாகி தமிழகத்தில் குறிப்பாக வட மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம் விளவித்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முதலமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அவசரக்கூட்டம் நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதன் காரணமாக மேலும் உயிர்ச்சேதமும் பொருட்சேதமும் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே கருதலாம்.
புயல் நிவாரணப்பணிகளுக்கு தமிழக அரசு ரூபாய் 150 கோடி ஒதுக்கியிருக்கும் அதே வேளை நிவாரணப் பணிகளை மேலும் திவீரமாக்க வேண்டும் உயிரிழந்தோர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.